இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமமாக விளங்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சில முக்கிய வர்த்தகங்களைத் தனிப்பட்ட முறையில் கவனிக்கவும், மேம்படுத்தவும் இதன் மூலம் குழுத்திற்குப் புதிய வர்த்தகத்தைக் கொண்டு வர வேண்டும் என்பதற்காகப் புதிய முடிவை எடுத்துள்ளது.
முகேஷ் அம்பானி
கடந்த சில வருடங்களாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி புதிய வர்த்தகத்தைத் தேடியும், தற்போது இருக்கும் வர்த்தகத்தை மேம்படுத்தவும் திட்டமிட்டு வருகிறார்.
இதன் அடிப்படையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் கீழ் புதிதாக 4 கிளை நிறுவனங்களைத் துவங்க திட்டமிட்டுள்ளார் முகேஷ்.
முக்கியத் துறை
இந்தக் கிளை நிறுவனங்கள் சுத்திகரிப்பு & மார்கெட்டிங், தேடுதல் & உற்பத்தி, பெட்ரோகெமிக்கல், டெக்ஸ்டைல், ஹைட்ரோகார்பன்ஸ், மற்றும் ரியல் எஸ்டேட் ஆகிய பிரிவில் இருக்கலாம் எனத் தெரிகிறது.
1000 கோடி ரூபாய்
மேலும் புதிதாகத் துவங்கப்படும் 4 கிளை நிறுவனங்களும் சுமார் 1,000 கோடி ரூபாய் பங்கு முதலீட்டு உடன் துவங்க உள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளது.
99 நிறுவனங்கள்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சுத்திகரிப்பு & மார்கெட்டிங், பெட்ரோகெமிக்கல்ஸ், எண்ணெய் மற்றும் எரிவாயு தேடல், ரீடைல், டெலிகாம், மீடியா ஆகிய துறையில் வர்த்தகம் செய்து வருகிறது.
இந்நிலையில் 2016-17ஆம் நிதியாண்டு அறிக்கையின் படி ரிலையன்ஸ் குழுமத்தில் சுமார் 99 கிளை நிறுவனங்கள், கூட்டணி நிறுவனங்கள், துணை நிறுவனங்கள் உள்ளது.
தற்போது புதிதாகத் துவங்கப்பட உள்ள 4 நிறுவனத்தின் மூலம் இதன் எண்ணிக்கை 103 ஆக உயர உள்ளது.


Click it and Unblock the Notifications