இந்தியாவில் பல எதிர்ப்புகளைத் தாண்டி நுகர்வோர் வர்த்தகத்தில் நுழைந்த வால்மார்ட், தற்போது பிளிப்கார்ட் நிறுவனத்தைக் கைப்பற்றியதன் மூலம் நாட்டு முழுவதும் பொருட்களை விற்பனை செய்யும் மிகப்பெரிய வாய்ப்பைப் பெற்றுள்ளது.
இந்தச் சூழ்நிலையில் பிளிப்கார்ட் நிறுவனத்தால் அமெரிக்க வால்மார்ட் நிறுவனத்திற்கு 10 பில்லியன் டாலர் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
வால்மார்ட்
வால்மார்ட், பிளிப்கார்ட் நிறுவனத்தைக் கைப்பற்ற பல வாரங்களாகப் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், புதன்கிழமை அறிவிப்பை வெளியிட்டது.
இதன் எதிரொலியாக நியூயார்க் பங்குச்சந்தையில் இருக்கும் வால்மார்ட் நிறுவன பங்குகள் சுமார் 4 சதவீதம் வரையில் சரிந்து 10 பில்லியன் டாலர் சந்தை மதிப்பீட்டை இழந்தது.
சந்தை மதிப்பீடு
செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் வால்மார்ட் நிறுவன பங்கு மதிப்பு 85.75 டாலர் 253 பில்லியன் டாலர் சந்தை மதிப்பீட்டைக் கொண்டுள்ள நிலையில், புதன்கிழமை வர்த்தகத்தில் 82.10 டாலர் வரையில் குறைந்து இந்நிறுவனத்தின் மதிப்பு 242 பில்லியன் டாலர் வரையில் குறைந்தது.
வியாழக்கிழமை வர்த்தக முடிவில் அதன் பங்கு மதிப்பு 82.67 டாலர் அளவில் முடிந்துள்ளது.
மிகப்பெரிய வாய்ப்பு
வால்மார்ட் இந்தியாவிற்கு வந்த பல வருடங்கள் ஆன நிலையிலும் பெரிய அளவிலான வர்த்தக வளர்ச்சியை அடையலில்லை, இதன் காரணமாகவே பெரிய அளவிலான முதலீட்டில் தற்போது ஆன்லைன் வர்த்தகத்தில் இறங்கியுள்ளது.


Click it and Unblock the Notifications