அமெரிக்காவின் மிகப் பெரிய ரீடெயில் நிறுவனமான வால்மார்ட் சீனா, பிரேசில், ஜெர்மனி மற்றும் யூகே என வெளிநாட்டில் கடையை விரித்த இடங்களில் எல்லாம் பெரிய அளவில் வெற்றி பெறாத நிலையில் இந்தியாவில் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் பல அதிரடி திட்டங்களுடன் களம் இறங்கியுள்ளது.
வால்மார்ட்டிற்கு இந்தியாவில் 21 கடைகள் தற்போது உள்ள நிலையில் அடுத்து வர இருக்கும் 4 முதல் 5 வருடத்தில் கூடுதலாக 50 கடைகளைத் திறக்க முடிவு செய்துள்ளதாக இந்திய தலைமை நிர்வாக அதிகாரியான கிரிஷ் ஐயர் தெரிவித்துள்ளார்.
2018
2018-ம் ஆண்டில் முதற்கட்டமாக 5 கடைகளைத் திறக்க இருப்பதாகவும் அடுத்த ஆண்டு 12 முதல் 15 கடைகளைத் திறக்க இருப்பதாகவும் கிரிஷ் ஐயர் குறிப்பிட்டது மட்டும் இல்லாமல் இந்திய கடைகள் எல்லாம் லாபத்தில் இயங்கி வருகிறது என்றும் தெரிவித்திருந்தார்.
வால்மார்ட்
இந்தியாவில் தற்போது வால்மார்ட்டிற்கு 9 மாநிலங்கள் மற்றும் 19 நகரங்களில் கடைகளைத் திறந்துள்ள நிலையில் பஞ்சாப், ஹரியானா, உத்திரப் பிரதேசம், உத்தரகண்ட், மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் கடைகளைத் திறக்க முடிவு செய்துள்ளதும் தெரியவந்துள்ளது.
வால்மார்ட்-பிளிப்கார்ட்
வால்மார்ட் தற்போது 5,000-க்கும் மேற்பட்ட பொருட்களை மொத்த விலையில் தனது கடைகள் மூலமாக விற்பனை செய்து வரும் நிலையில் புதன்கிழமை வால்மார்ட் வெற்றிகரமாகப் பிளிப்கார்ட் நிறுவனத்தின் 77 சதவீத பங்குகளை 14 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கியுள்ளது மட்டும் இல்லாமல் 2 பில்லியன் டாலர் தொகையினை முதலீடாகச் செய்ய உள்ளது.
எப்டிஐ
இந்திய ரீடெயில் துறையில் வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்து கடைகளைத் திறக்கின்றன என்றால் அந்த நகரத்தில் குறைந்து 10 லட்சம் வரை மக்கள் தொகை இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications