இந்தியாவின் 4 முக்கியப் பொதுத் துறை வங்கி நிறுவனங்கள் வாரா கடன் அளித்துள்ளதால் 4-ம் காலாண்டு முடிவில் 11,729 கோடி ரூபாய் அதாவது 1.74 பில்லியன் டாலரினை இழந்துள்ளதாக வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளன.
கனரா வங்கி
4 வங்கிகளில் அதிக நட்டம் அடைந்துள்ள பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் கனரா வங்கி மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந்த 4-ம் காலாண்டில் 4,860 கோடி ரூபாய் நிகர நட்டம் அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதே காலாண்டில் சென்ற ஆண்டு 214 கோடி ரூபாய் நிகர லாபம் பெற்றுள்ளதாகக் கனரா வங்கி அறிவித்து இருந்தது.
அலகாபாத், யூகோ & தேனா வங்கி
அலகாபாத் வங்கி 3,510 கோடி ரூபாயும், யூகோ வங்கி 2,134 கோடி ரூபாயும், தேனா வங்கி 1,225 கோடி ரூபாயும் நிகர நட்டம் அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளன.
இந்திய வங்கிகள்
2016-2017 நிதி ஆண்டில் இந்திய வங்கிகள் 9.5 லட்சம் கோடி ரூபாய் வரா கடன் சிக்கலில் தவித்து வந்த நிலையில் தற்போது அது மேலும் அதிகரிக்கும் என்பதையே அன்மை காலத் தரவுகள் கூறுகின்றன. எனவே மத்திய வங்கி பெரும் அளவில் விதிகளை நெருக்கியுள்ளது.
புது டெல்லி
புது டெல்லியில் மட்டும் 21 கடன் அளிக்கும் நிறுவனங்கள் பெரும் அளவில் மோசமான கடன் அளித்துள்ளன என்றும் அவற்றின் மதிப்பு 32 பில்லியன் டாலர் ஆகும்.
கனரா வங்கி வாரா கடன்
கனரா வங்கியின் வரா கடன் சதவீதம் 3ம் காலாண்டு இருந்த 10.38 சதவீதம் மற்றும் சென்ற ஆண்டு 4-ம் காலாண்டில் இருந்த 9.63 சதவீதத்தினை விட அதிகமாக உயர்ந்து 2017-2018 நிதி ஆண்டின் கடைசிக் காலாண்டில் 11.84 சதவீதமாக உள்ளது. வரா கடன் மதிப்பு சென்ற ஆண்டு இருந்ததை விட மூன்று மடங்கு உயர்ந்து 8,763 கோடி ரூபாயாக உள்ளது.
அலகாபாத், யூகோ & தேனா வங்கிகளில் உள்ள வாரா கடன்
அலகாபாத், யூகோ மற்றும் தேனா வங்கியின் வரா கடனும் மார்ச் 31-ம் தேதியுடன் முடிந்த காலாண்டில் உயர்ந்துள்ளதாகத் தரவுகள் கூறுகின்றன.
யூனியன் பாங்க் ஆப் இந்தியா
பொதுத் துறை வங்கி நிறுவனமான யூனியன் பாங்க் ஆப் இந்தியா வியாழக்கிழமை 4ம் காலாண்டு அறிக்கையினை வெளியிட்ட போது 2,583 கோடி ரூபாய் நிகர நட்டம் அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
முக்கிய வங்கிகள்
இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கி நிறுவனங்களான பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷ்னல்; வங்கி, பாங்க் ஆ பரோடா மற்றும் பாங்க் ஆப் இந்தியா உள்ளிட்டவை வரும் நாட்களில் தங்களது காலாண்டு அறிக்கையினை வெளியிட இருக்கின்றன.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் நடந்தது என்ன? மஃப்டியில் வேலை செய்த மகளிர் போலீஸின் ஷாக் ரிப்போர்ட் !!

சட்டமன்ற தேர்தல் 2026: உங்களின் Booth Slip-ஐ ஆன்லைனில் டவுன்லோட் செய்வது எப்படி?



Click it and Unblock the Notifications