ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறிய நிலையில், ஈரான் மீது புதிய வர்த்தகத் தடையை விதிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதனால் கச்சா எண்ணெய் சந்தையில் வரும் ஈரான் கச்சா எண்ணெய் வர்த்தகத்திற்கு வராது.
இதனால் கச்சா எண்ணெய் சந்தையில் மிகப்பெரிய தட்டுப்பாடு நிலவும், இதன் வாயிலாகத் தற்போது ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை தற்போது 77 டாலராக உயர்ந்துள்ளது.

இதன் மூலம் கச்சா எண்ணெய் விலை 3.5 வருட உயர்வை அடைந்து மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்தியாவில் கர்நாடக தேர்தலுக்காக மக்களின் வாக்குகளைக் கவர வேண்டும் என்பதற்காகப் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தாமல் வைக்கப்பட்ட நிலையில், தற்போது தேர்தல் முடிந்த நிலையில் நாளை காலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் அமெரிக்கா ஈரான் மீது தடை விதித்த பின்பு இதன் விலை 80 டாலரை தாண்டும் எனவும் தெரிகிறது.


Click it and Unblock the Notifications