அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனம் இந்தியாவின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட்-ஐ கைப்பற்றிய நிலையில் வால்கார்ட் கூட்டணி இந்தியாவில் சுமார் 1 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என வால்மார்ட் சிஇஓ டக் மெக்மில்லன் தெரிவித்துள்ளார்.
வால்மார்ட்
இந்தியாவில் தனது வர்த்தகத்தை ஆன்லைன் வாயிலாக விரிவாக்கம் செய்ய வேண்டும் என வால்மார்ட் திட்டமிட்டு யாரும் கொடுக்க முடியாத 16 பில்லியன் டாலர் என்ற வியக்க வைக்கும் தொகையைக் கொடுத்து 77 சதவீத பங்குகளை வாங்கத் தயாராகி நிற்கிறது.
வேலைவாய்ப்பு
இந்நிலையில் வால்மார்ட், பிளிப்கார்ட் கூட்டணியான வால்கார்ட் கூட்டணி மூலம் இந்தியாவில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 1 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என வால்மார்ட் சிஇஓ மெக்மில்லன் தெரிவித்துள்ளார்.
பெயர் மாற்றம்..
இந்நிலையில் பிளிப்கார்ட் பெயரை வால்மார்ட் ஆகவோ அல்லது வால்கார்ட் ஆகவோ மாற்றப்படுமா எனக் கேட்டபோது, பெயர் மாற்றம் எல்லாம் செய்யப்போவதில்லை. பிளிப்கார்ட் அதே பெயரை கொண்டே இந்தியாவில் இயங்கும் எனத் தெரிவித்துள்ளார்.
பேமெண்ட் சேவை
வால்மார்ட்க்கு, பிளிப்கார்ட் நிறுவனத்தில் இருந்து தற்போது அதிக நன்மைகள் உண்டு, குறிப்பாகப் பிளிப்கார்ட் பேமெண்ட் சேவையை வால்மார்ட் இந்தியாவில் பெரிய அளவில் விரிவாக்கம் செய்ய முடியும்.
பொருளாதாரம்
இதுமட்டும் அல்லாமல் வால்மார்ட், பிளிப்கார்ட் கூட்டணி மூலம் இந்திய ரீடைல் சந்தையில் பெரிய அளவிலான மாற்றங்களை ஏற்பட உள்ளது. இதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் நிச்சயம் வளர்ச்சி அடையும்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு



Click it and Unblock the Notifications