இந்திய ஐடி ஊழியர்களுக்கு உள்ளது போன்று எந்த ஒரு நாட்டில் உள்ளவர்களுக்கு எச்-1பி விசாவை அதிகளவில் பெற வேண்டும் என்ற ஈடுபாடு இல்லை என்று தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்துள்ள தகவல்கள் கூறுகின்றன.
2017-ம் ஆண்டு அமெரிக்காவின் எச்-1பி விசாவினை 76 சதவீதம் வரை இந்தியர்கள் மட்டுமே பெற்றுள்ளதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. 2016-ம் ஆண்டு எச்-1பி விசாவிற்கு விண்ணப்பித்த 74.2 சதவீதத்தினரை விடக் கூடுதலாகச் சென்ற ஆண்டில் 75.6% விசா அனுமதிகளை இந்தியர்கள் பெற்றுள்ளனர்.
சீனா
இந்தியாவிற்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் சீனா 9.4 சதவீத எச்-1பி விசா அனுமதிகளை 2017-ம் ஆண்டுப் பெற்றுள்ளதாக அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் தெரிவித்துள்ளது.
எச்-1பி விசா
எச்-1பி விசா அமெரிக்கர்கள் அல்லாத ஒருவரை அங்குப் பணியில் அமர்த்த அனுமதிக்கப்படும் முறையாகும். அமெரிக்காவில் ஒரு வேலையைச் செய்யத் தேவையான திறமையானவர்கள் கிடைக்கவில்லை எனும் போதே இந்த விசாவின் கீழ் நிறுவனங்களால் ஊழியர்களைப் பணிக்கு எடுக்க முடியும். விசாவை பெறும் ஊழியரால் அதிகபட்சம் 6 வருடங்கள் வரை அமெரிக்காவில் பணிபுரிய முடியும்.
ஒரு ஆண்டுக்கு 65,000 நபர்களுக்கு வேலை செய்வதற்காகவும் கூடுதலாக 20,000 நபர்களுக்கு அமெரிக்காவில் படிக்க மற்றும் ஆய்வுகள் செய்யவும் எச்-1பி விசா வழங்கப்படுகிறது.
இந்திய ஐடி நிறுவனங்கள்
எச்-1பி விசா சேவையினை இந்திய ஐடி நிறுவனங்களான டிசிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ உள்ளிட்டவை அதிகளவில் பெறுவதாகச் சர்ச்சைகள் உள்ளன.
அமெரிக்க நிறுவனங்கள்
அமேசான், மைக்ரோசாப்ட், கூகுள், காக்னிசெண்ட் உட்படப் பல அமெரிக்க நிறுவனங்களும் வெளிநாட்டவர்களை இந்த விசா சேவை மூலமாகப் பணிக்கு எடுக்கின்றன.
டொனால்டு டிரம்ப்
2017-ம் ஆண்டு முதல் அமெரிக்க அதிபராகப் பெருப்பேற்றுள்ள டொனால்டு டிரம்ப் எச்-1பி விசா விதிகளைக் கடுமை படுத்தி வரும் நிலையிலும் இந்தியர்கள் அதிகளவில் எச்-1பி விசாவினை பெறுவதைக் குறைக்கமுடியவில்லை.


Click it and Unblock the Notifications