நாட்டின் முக்கியத் தலைவர்கள் அனைவரும் கர்நாடக தேர்தலுக்காகப் பிரச்சாரம் செய்து மக்களின் வாக்குகளைப் பெற போராடிய இம்மாநிலத்தின் தேர்தலில் காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சிகள் கூட்டணியில் ஆட்சி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஜேடிஎஸ் கட்சி வெறும் 38 இடத்தில் மட்டுமே வெற்றி அடைந்திருந்த நிலையிலும் கூட்டணிக்காக முதல்வர் பதவியை குமாரசாமி அவர்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் நடந்த மாநில தேர்தல்களில் அதிகச் செலவு செய்யப்பட்டு நடந்த மிகவும் காஸ்ட்லியான தேர்தல்களில் கர்நாடக தேர்தல் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
சிஎம்எஸ் அமைப்பு.
சென்டப் பார் மீடியா ஸ்டெடீஸ் என்னும் அமைப்பு நடத்தி ஆய்வில் கர்நாடக மாநில தேர்தலில் அரசியல் கட்சிகள் மற்றும் அதன் தலைவர்கள் சுமார் 9,500 -10,500 கோடி ரூபாய் வரையிலான தொகையைச் செலவு செய்துள்ளதாக இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இது 2013ஆம் ஆண்டுத் தேர்தலில் செலவு செய்யப்பட்ட தொகையை விடவும் இரண்டு மடங்கு அதிகமாகும்.
மோடி
மேலும் இந்த ஆய்வில் பிரதமர் மோடியின் பிரச்சாரச் செலவுகள் பற்றித் தகவல்கள் கிடைக்காத நிலையில், இந்த ஆய்வில் அவை சேர்க்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது சிஎம்எஸ் அமைப்பு.
20 வருடங்கள்
கடந்த 20 வருடத்தில் நடந்த தேர்தல்களில் கர்நாடக மாநில தேர்தலில் பிற மாநிலங்களை விடவும் அதிகளவில் செலவு செய்யப்படுகிறது எனச் சிஎம்எஸ் அமைப்பின் ஆய்வுகள் கூறுகிறது.
டாப் 3 மாநிலங்கள்
இதன்படி இந்தியாவில் அதிகச் செலவில் நடக்கும் மாநில தேர்தல்களில் முதல் இடத்தைக் கர்நாடகா பெற்றுள்ள நிலையில் டாப் 3 இடத்தை ஆந்திர பிரதேசம் 2வது இடத்தையும், தமிழ்நாடு 3வது இடத்தைப் பிடித்துள்ளது.
கணிப்பு
2014 பொதுத் தேர்தலில் 30,000 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டது, இதை வைத்துப் பார்க்கும்போது 2019ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் 50,000 - 60,000 கோடி ரூபாய் வரையில் செலவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது எனவும் இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications