தென்னிந்தியாவில் இருக்கும் 5 மாநிலங்களும் மத்திய அரசுக்கு எதிராக இருக்கும் இன்றைய நிலையில் கர்நாடக தேர்தல் மோடி, அமித் ஷா தலைமையிலான பிஜேபி கட்சிக்கு மிக முக்கியமானதாக இருக்கிறது. இத்தேர்தலில் வெற்றிபெற்ற ஆக வேண்டும் என்ற ஒற்றை இலக்குடன் பல வேலைகளைச் செய்த பிஜேபி அரசு.
மக்களைக் கவர தினமும் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலையை ஏப்ரல் 24 முதல் உயர்த்தாமல் நாடகமாடியது. தற்போது கர்நாடகாவில் தேர்தல் முடிந்த உடனேயே பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியுள்ளது மத்திய அரசு.
திங்கட்கிழமை
சனிக்கிழமை கர்நாடக மாநிலத்தில் தேர்தல் முடிந்த நிலையில், திங்கட்கிழமை காலையில் பெட்ரோல் மீது லிட்டருக்கு 17 பைசாவும், டீசல் மீது லிட்டருக்கு 21 பைசாவும் உயர்த்தியுள்ளது மத்திய அரசு.
விலை மாற்றம்
இதன் மூலம் சென்னையில் 77.43 ரூபாயாக விற்கப்பட்ட ஒரு லிட்டர் பெட்ரோல் இன்று 77.61 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ஒரு லிட்டர் டீசல் 69.56 ரூபாயாக இருந்த நிலையில் தற்போது 69.79 ரூபாயாக உயர்ந்துள்ளது.
கச்சா எண்ணெய் விலை
இந்தியா கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளின் விலை பட்டியலின் படி 2017ஆம் ஆண்டில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் சராசரி விலை 47.56 டாலராகவும், 2018ஆம் நிதியாண்டில் 56.43 டாலராகவும் இருந்த நிலையில் 2019ஆம் நிதியாண்டில் தடாலடியாக இதன் விலை 69.30 டாலராக உயர்ந்துள்ளது.
மே 11ஆம் தேதியில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 75.26 டாலர் வரையில் உயர்ந்துள்ளது.
அமெரிக்காவின் முடிவு
ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறிய நிலையில், ஈரான் மீது புதிய வர்த்தகத் தடையை விதிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதனால் கச்சா எண்ணெய் சந்தையில் வரும் ஈரான் கச்சா எண்ணெய் வர்த்தகத்திற்கு வராது.
தட்டுப்பாடு
இதனால் கச்சா எண்ணெய் சந்தையில் மிகப்பெரிய தட்டுப்பாடு நிலவும், இதன் வாயிலாகத் தற்போது ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை தற்போது 77 டாலராக உயர்ந்துள்ளது.
80 டாலரை தொடும்
இதன் மூலம் கச்சா எண்ணெய் விலை 3.5 வருட உயர்வை அடைந்து மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் அமெரிக்கா ஈரான் மீது தடை விதித்த பின்பு இதன் விலை 80 டாலரை தாண்டும் எனவும் தெரிகிறது.
முக்கியக் காரணம்
ஒரு பேரல் கச்சா எண்ணெய் 45 டாலருக்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது 70 டாலருக்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுவதற்கு முக்கியக் காரணம் OPEC அமைப்பில் இருக்கும் நாடுகளுடன் ரஷ்யாவும் இணைந்த கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகளவில் குறைத்துள்ளது.
80 டாலர்
இதனால் கச்சா எண்ணெய் சந்தையில் செயற்கை எண்ணெய் தட்டுப்பாடு உருவாகியுள்ளது. இதன் வாயிலாகவே தற்போது கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. இதனுடன் தற்போது ஈரான் பிரச்சனையும் சேர்ந்துள்ளதால் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 80 டாலர் வரையில் உயரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications