பிளிப்கார்ட் நிறுவனத்தை வால்மார்ட் கைப்பற்றிய நிலையில், தனது 21 சதவீத பங்குகளை விற்பனை செய்யலாமா வேண்டாமா என்ற மிகப்பெரிய யோசனையில் உள்ளது ஜப்பான் சாப்ட்பேங்க். சொல்லப்போனால் சாப்ட்பேங்க் நிறுவனத்தின் முடிவே வால்மார்டின் ஆதிக்கத்தை நிர்ணயம் செய்யும்.
இப்படி இருக்கும் போது சாப்ட்பேங்க் பிளிப்கார்டு நிறுவனத்தின் சக போட்டி நிறுவனத்தில் பணத்தைக் கொட்ட முடிவு செய்துள்ளது..
இந்திய ஈகாமர்ஸ்
ஜப்பான் சாப்ட்பேங்க்-ஐ இந்திய இண்டர்நெட் நிறுவனங்களின் அதிரடி வளர்ச்சி பெரிய அளவில் ஈர்த்துள்ளது என்றால் மிகையாகாது. ஏற்கனவை பிளிப்கார்ட் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள சாப்ட்பேங்க், இந்திய ஈகாமர்ஸ் சந்தையில் தனது ஆதிக்கத்தை அதிகரித்துக்கொள்ளப் பேடிஎம் மால் நிறுவனத்தில் கூடுதலாக முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது.
பேடிஎம் மால்
சாப்ட்பேங்க் நிறுவனம் ஏற்கனவே பேடிஎம் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஓன்97-இல் முதலீடு செய்துள்ள நிலையில், தற்போத இந்நிறுவனத்தின் ஈகாமர்ஸ் வர்த்தக நிறுவனமான பேடிஎம் மால் நிறுவனத்தில் 3 பில்லியன் டாலர் வரையில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளது.
தோல்வி
அதேபோல் சாப்ட்பேங்க் ஸ்னாப்டீல் நிறுவனத்தில் அதிகளவில் முதலீடு செய்துள்ள நிலையில், இந்நிறுவனத்தின் தொடர் வர்த்தக வீழ்ச்சியின் காரணமாக ஸ்னாப்டீல் நிறுவனத்தைப் பிளிப்கார்ட் உடன் இணைக்கும் பேச்சுவார்த்தையில் தோல்வியைச் சந்தித்தது.
ஆரம்பக் கட்டம்...
சாப்ட்பேங்க் நிறுவனத்தின் 3 பில்லியன் டாலர் முதலீடு குறித்த பேச்சுவார்த்தை தற்போது ஆரம்பகட்டத்திலேயே உள்ள நிலையில், இதன் வெற்றி வாய்ப்புகள் குறித்துத் தற்போது பேச முடியாது.
அசத்தலான முதலீடுகள்
இந்தியாவில் வெற்றிபெற்ற பல முன்னணி இண்டர்நெட் நிறுவனங்களில் சாப்ட்பேங்க் பெரிய அளவில் முதலீடு செய்து சத்தமில்லாமல் இதனைப் பின்னால் இருந்து ஆட்டிவைத்து வருகிறது.
இதன் படி பிளிப்கார்ட் நிறுவனத்தில் 2.5 பில்லியன் டாலர், ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தில் 1.4 பில்லியன் டாலர், ஓஒய்ஓ நிறுவனத்தில் 250 மில்லியன் டாலர், ஓலா நிறுவனத்தில் 1.1 பில்லியன் டாலர், ஸ்னாப்டீல் நிறுவனத்தில் 627 மில்லியன் டாலர் என முதலீட்டை அள்ளி வீசியுள்ளது.
5 பில்லியன் டாலர்
ஏப்ரல் -டிசம்பர் 2017 வரையிலான காலத்தில் மட்டும் சாப்ட்பேங்க் இந்திய நிறுவனங்களில் சுமார் 5 பில்லியன் டாலர் வரையிலான முதலீட்டைச் செய்துள்ளது.
இந்தியாவில் இந்நிறுவனம் செய்த முதலீட்டுத் தொகை மட்டும் 8 பில்லியன் டாலர்.
More From GoodReturns

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!



Click it and Unblock the Notifications