மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம்.. நிதி அமைச்சரானார் பியூஷ் கோயல்..!

மத்திய நிதி அமைச்சராக இருந்த அருண் ஜேட்லிக்குத் திங்கட்கிழமை சிறுநீரக அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்ததை அடுத்து உடல் நலம் தேறி வரும் நிலையில் அக்டோபர் மாதம் வரை ரயில்வே அமைச்சராக இருந்த பியூஷ் கோயல்-க்குக் கூடுதலாக நிதி மற்றும் கார்ப்பரேட் விவகார துறை அமைச்சக பொருப்பு அளிக்கப்பட்டுள்ளது.

ஸ்மிர்தி இராணி

ஸ்மிர்தி இராணி

மாநிலங்களவைக்கான தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சராக இருந்த ஸ்மிர்தி இராணி வெளியேற்றப்பட்டுள்ளார்.

எஸ்எஸ் அலுவாலியா

எஸ்எஸ் அலுவாலியா

மாநிலங்களவையில் குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சக பொறுப்பை வகித்து வந்த எஸ்எஸ் அலுவாலியா-க்கு அதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு மாநிலங்கள் அவைக்கான மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

 அருண் ஜேட்லி

அருண் ஜேட்லி

அருண் ஜேட்லிக்கு 65 வயது ஆகியுள்ள நிலையில் சனிக்கிழமை ஏயிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டார். திங்கட்கிழமை காலை 8 மணிக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாகச் செய்யப்பட்டது. ஏற்கனவே அருண் ஜேட்லிக்கு இதயம் மற்றும் உடல் பருமன் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள நிலையில் ஏப்ரல் முதல் வாரம் முதல் தனது வீட்டில் இருந்தபடியே தான் தனது பணிகளைச் செய்து வந்தார்.

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்

மே-4 ம் தேதி நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திலும் இவர் வீடியோ கான்ஃப்ரன்ஸ் சேவை மூலமாகவே பங்கேற்றார்.

மீண்டும் எப்போது வருவார்

மீண்டும் எப்போது வருவார்

அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்துள்ள நிலையில் உடல் நலம் முழுமையாகத் தேறிய பிறகு அக்டோபர் மாதம் மீண்டும் அமைச்சகத்திற்குத் திரும்புவார் என்று தகவல்கள் கூறுகின்றன.

லண்டன் பயணம் ரத்து

லண்டன் பயணம் ரத்து

லண்டனில் அடுத்த வாரம் இந்தியா - ஐக்கிய நாடுகள் இடையிலான 10வது பொருளாதார மற்றும் நிதி மாநாட்டில் அருண் ஜேட்லி பங்கேற்பதாக இருந்த நிலையில் அந்தப் பயணமும் இரத்து செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 6-ம் தேதி இவருக்குச் சிறுநீரகத் தொற்று ஏற்பட்டுள்ளதாக டிவிட் மூலமாக உறுதியும் செய்துள்ளார்.

பியூஷ் கோயல்

பியூஷ் கோயல்

அக்டோபர் மாதம் வரை நிதி அமைச்சர் பொறுப்பை நிர்வகிக்க உள்ள பியூஷ் கோயல் அருண் ஜேட்லியின் சிகிச்சை நல்ல படியாக முடிந்ததற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சராக உள்ள ராஜ்நாத் சிங்கும் தனது மகிழ்ச்சியை டிவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.

 ராகுல் காந்தி

ராகுல் காந்தி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் டிவிட்டரில் "ஜேட்லி ஜியின் சிறுநீரக அறுவை சிகிச்சை ஏயிம்ஸ் மருத்துவமனையில் நல்ல படியாக முடிந்ததைக் கேள்விப்பட்டேன். நான் அவர் உடல் நலம் விரைவாகக் குணம் அடைய வாழ்த்துகிறேன்" என்றும் தெரிவித்துள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+