பிளிப்காட்டின் கார்ட்-ஃபாதர் லீ ஃபிக்சல்.. யார் இவர்?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

லீ ஃபிக்சல் டைகர் குலீபளில் 2006-ம் ஆண்டுச் சேருகிறார். அப்போதே ஃபிக்சல் உலகின் முக்கிய ஸ்டார்ட்அப் முதலீட்டாளராக உள்ளார். பல நிறுவனர்களை ஸ்கைப் மூலம் தொடர்புகொள்வது முதலீடுகளை வாரி வழங்குவது பிற முதலீட்டாளர்களைக் குழப்புவது எனப் போர்ப்ஸ் முதலீட்டாளர்கள் பட்டியலில் 38 வயதில் இடம்பெறுகிறார்.

ஜெர்மன் டெக் நிறுவனமான ராக்கெட் இண்டெர்னெட் அமேசான், உபர் மற்றும் அமெரிக்க நிறுவனங்கள் போன்ற காப்பி நிறுவனங்கள் மீது முதலீடு செய்கிறது. இந்த உத்தியை அப்படியே எடுத்துக்கொண்ட லீ ஃபிக்சல் இந்தியா, லத்தின் அமேரிக்கா, சீனா, தென் கிழக்கு ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மீது முதலீடு செய்யத் துவங்குகிறார்.

வெளிநாட்டு முதலீடுகள்
 

வெளிநாட்டு முதலீடுகள்

அமெரிக்காவிலும் பேஸ்புக், லின்கிடுஇன் உள்ளிட்ட நிறுவனங்கள் மீதும் சில ஆன்லைன் இசை நிறுவனங்கள் மீதும் குறைந்த அளவிலான தொகையினை முதலீடு செய்யத் துவங்குகிறார்.

சாப்ட்பாங்க்

சாப்ட்பாங்க்

ஜப்பானின் சாப்ட்பாங்க் உள்ளிட்ட நிறுவனங்கள் இணையதள ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீடு செய்யத் தயங்கி வந்த நேரத்தில் லீ ஃபிக்சல் எதைப் பற்றியும் கவலைப்படாமல் சிறிய அளவில் முதலீடுகளைச் செய்யத் துவங்குகிறார்.

பிளிப்கார்ட்

பிளிப்கார்ட்

பின்னர் முதன் முதலாக 2009-ம் ஆண்டுப் பிளிப்கார்ட் நிறுவனத்தில் 3 தவணையைக்க 1 பில்லியன் டாலரினை முதலீடு செய்ய ஒப்புக்கொள்கிறார். அதன் படி முதலீடு செய்யப் பிளிப்கார்ட் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் போன்றவற்றை விற்பனை செய்வதில் தீவரம் காட்டுகிறது. இதற்காக இவர் தான் ஏற்கனவே முதலீடு செய்து வந்த ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்வதைக் குறைத்து நெருக்கடி அளித்து அதனைப் பிளிகார்ட் நிறுவனத்திற்கு விற்கவும் வைத்துள்ளார்.

அமேசான்
 

அமேசான்

2015-ம் ஆண்டுப் பிள்ப்கார்ட் நிறுவனம் அமேசான் நிறுவனத்துடன் போட்டி போட முடியாமல் தடுமாறி சந்தையினை இழந்து வந்த சூழலில் டைகர் குலோபள் பார்ட்னர் லீ ஃபிக்சல் அதற்கான தீர்வை தேடுகிறார். அப்போது பிளிப்கார்ட் நிறுவனத்தில் இருந்து சச்சின் பன்சாலால் வெளியேற்றப்பட்ட முன்னாள் போர்டு உறுப்பினர்களில் முதன்மையன ஒருவர் லீ ஃபிக்சலை சந்திக்கிறார்.

 சச்சின் பன்சால்

சச்சின் பன்சால்

அப்போது சச்சின் பன்சாலை நீக்கிவிட்டுக் கல்யாண் கிருஷ்ணமூர்த்தியை பிளிப்கார்ட்டின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்படுகிறது.

 பின்னி பன்சால்

பின்னி பன்சால்

ஆனால் நியூ யார்க்கை சேர்ந்த லீ ஃபிக்சல் அதற்கு இணையான ஒரு திட்டத்தினை வகுத்து பிளிப்கார்ட்டின் தலைமை நிர்வாகப் பதவியில் இருந்து இணை நிறுவனரான சச்சின் பன்சாலை வெளியேற்றிப் பின்னி பல்சாலை 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் தலைமை நிர்வாகப் பொறுப்பிற்குக் கொண்டு வருகிறார். அதனுடன் அவரது வேலை முடிந்துவிடவில்லை.

கல்யாண கிருஷ்ணமூர்த்தி

கல்யாண கிருஷ்ணமூர்த்தி

ஆனால் மீண்டும் ஜூன் மாதம் முதல் பிளிப்கார்ட் அமேசானுடன் போட்டி போட முடியாமல் தடுமாறத் துவங்குகிறது. அப்போது டைகரில் தனது வலது கையாக இருக்கும் கல்யாண கிருஷ்ணமூர்த்தியை பிளிப்கார்ட்டினை காப்பாற்ற அனுப்புகிறார். அதன் பிறகு பிளிப்கார்ட்டின் வளர்ச்சி அபரிவிதமாகிறது.

 பிளிப்கார்ட் பரிவர்த்தனை

பிளிப்கார்ட் பரிவர்த்தனை

பிளிப்கார்ட் நிறுவனத்தில் இவர் 1,000 மில்லியன் டாலர் வரை முதலீடு செய்துள்ள நிலையில் வால்மார்ட் நிறுவனம் அதனை வாங்கியதை அடுத்து 3,500 முதல் 3,700 மில்லியன் டாலர் வரை இவருக்குக் கிடைக்க உள்ளது.

பிற முக்கிய ஸ்டார்ட்அப்கள் விற்பனை

பிற முக்கிய ஸ்டார்ட்அப்கள் விற்பனை

இதே போன்று மேக்மைடிரிப் நிறுவன விற்பனையில் 150 முதல் 180 மில்லியன் வரையிலும், சாவன் நிறுவனம் ரிலையன்ஸ் உடன் இணைந்ததன் மூலம் 30 முதல் 40 மில்லியன் டாலரும் இவருக்கு வருவாயாகக் கிடைத்துள்ளது எனலாம்.

பிற முதலீடுகள்

பிற முதலீடுகள்

பிளிப்கார்ட் மட்டும் இல்லாமல் ஓலா நிறுவனத்தில் 200 மில்லியன் டாலரும், தெல்லிவர் நிறுவனத்தில் 130 மில்லியன் டாலரும், குவிக்கர் நிறுவனத்தில் 130 மில்லியன் டாலரும் லீ ஃபிக்சல் முதலீடு செய்துள்ளார். இதுபோல இந்திய ஸ்டார்ட்அப் உலகில் பல மாற்றங்களுக்குக் காரணகத்தாவாக இவர் இருந்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Do you know about Flipkart’s godfather Lee Fixel?

Do you know about Flipkart’s godfather Lee Fixel?
Story first published: Tuesday, May 15, 2018, 19:06 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X