கர்நாடக தேர்தலுக்காக மத்திய அரசு ஏப்ரல் 24 முதல் மே 13ஆம் தேதி வரை சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தாமல் இருந்தது.
தற்போது தேர்தல் வேலைகள் முடிந்த நிலையில் திங்கட்கிழமை முதல் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த துவங்கியது. 2வது நாளாகச் செவ்வாய்க்கிழமையும் இதன் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளது.
திங்கட்கிழமை
சனிக்கிழமை கர்நாடக மாநிலத்தில் தேர்தல் முடிந்த நிலையில், திங்கட்கிழமை காலையில் பெட்ரோல் மீது லிட்டருக்கு 17 பைசாவும், டீசல் மீது லிட்டருக்கு 21 பைசாவும் உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
செவ்வாய்க்கிழமை
இன்று காலை 6 மணி முதல் பெட்ரோல் விலையை ஒரு லிட்டருக்கு 15 பைசாவும், டீசல் 23 பைசா வரையில் நாட்டின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் உயர்த்தியுள்ளது.
பெட்ரோல் விலை
இன்று காலையில் ஏற்பட்ட விலை மாற்றத்தின் படி ஒரு லீட்டர் பெட்ரோல் விலை நிலவரம்
டெல்லி : 74.95 ரூபாய் (ஒரு லிட்டர்)
கொல்கத்தா : 77.65 ரூபாய் (ஒரு லிட்டர்)
மும்பை : 82.79 ரூபாய் (ஒரு லிட்டர்)
சென்னை : 77.77 ரூபாய் (ஒரு லிட்டர்)
டீசல்
இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்ட இன்றைய விலை டீசல் விலை நிலவரம்
டெல்லி : 66.36 ரூபாய் (ஒரு லிட்டர்)
கொல்கத்தா : 68.90 ரூபாய் (ஒரு லிட்டர்)
மும்பை : 70.66 ரூபாய் (ஒரு லிட்டர்)
சென்னை : 70.02 ரூபாய் (ஒரு லிட்டர்)
உரிமை
தங்கம் விலையைப் போல் சர்வதேச கச்சா எண்ணெய் சந்தை மற்றும் உற்பத்தித் திறனை அடிப்படையாகக் கொண்டு பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்யும் உரிமையை எண்ணெய் நிறுவனங்களிடமே கொடுக்கப்பட்டுள்ளது.
இதன் வாயிலாகவே தற்போது இந்தியன் ஆயில், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், பார்த் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் இயங்கி வருகிறது.
சர்வதேச சந்தை நிலவரம்
செவ்வாய்க்கிழமை எண்ணெய் வர்த்தகத்தில் WTI க்ரூட் ஆயில் ஒரு பேரல் 71.01 டாலரை வரையில் உயர்ந்துள்ளது, இதேபோல் பிரென்ட் க்ரூட் 78.30 டாலராகவும், மார்ஸ் யுஎஸ் 71.29 டாலராகவும், OPEC 74.42 டாலராகவும் உள்ளது.
அடுத்தச் சில நாட்களில் பிரென்ட் க்ரூட் ஆயில் விலை பேரலுக்கு 80 டாலரை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

இந்தியாவில் மீண்டும் லாக்டவுன் வருகிறதா? மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!!

பெட்ரோல், டீசல் விலை குறையாது..? மத்திய அரசின் 10 ரூபாய் விலை குறைப்பு பின் இருக்கும் உண்மை..!!

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என தகவல் பரப்பினால் சட்ட நடவடிக்கை: மத்திய அரசு கடும் எச்சரிக்கை!!

பெட்ரோல், டீசல் விலை குறையுமா? அதிரடியாக வரியை குறைத்த மத்திய அரசு!! வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்!!

பேருந்து டிக்கெட் கட்டணங்கள் குறைப்பு: எரிபொருளை சேமிக்க பொது போக்குவரத்தை பயன்படுத்த அறிவுரை!!

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: நயாரா நிறுவன பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதால் மக்கள் ஷாக்

பெட்ரோல் விலை ரூ.40 வரை உயர வாய்ப்பு? ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்.. மீண்டும் வருகிறதா Oil Bond?

இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய்-யின் உண்மையான விலை 160 டாலர்.. அதிர்ச்சி அளிக்கும் தகவல்..!!

பெட்ரோல், டீசல் விலை 15 நாட்களுக்கு ஒருமுறை மாறுமா? மதிப்பாய்வு முறையை மாற்றிய அரசு

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!



Click it and Unblock the Notifications