முகேஷ் அம்பானி முதலில் தனது மகன் ஆகாஷ் அம்பானிக்கும் வைர வியாபாரியான ரஸ்ஸல் மேத்தாவின் மகள் ஷோலேகா மேத்தாவிற்கும் டிசம்பர் மாதம் திருமணம் செய்ய இருப்பதாக அறிவித்த ஒரு மாதத்தில் மகள் ஈஷா அம்பானிக்கும் ஆனந்த் பிராமலுக்கும் நிச்சயம் செய்தார். அடுத்து ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்சண்ட்டை திருமணச் செய்ய இருக்கிறார் என்று சமுக வலைத்தளங்களில் புகைப்படம் டிரெண்ட் ஆகி இருந்தது. உடனே இதனை இந்தியா டூடே செய்தியாக்கியது குறிப்பிடத்தக்கது
ராதிகா மெர்சண்ட்
ஆனந்த் அம்பானியுடன் உள்ள ராதிகா மெர்சன் என்கோர் ஹெல்த்கேர், ஜய்க் பார்மா உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவரான விரென் அஜித்குமார் மெர்சண்ட்டின் மகள் ஆவார்.
ஆனந்த் அம்பானி & ராதிகா மெர்சண்ட்
ஆனந்த் அம்பானியை ராதிகா மெர்சண்ட் கட்டிப்பிடித்து உள்ளதைப் பொன்ற படம் இன்ஸ்டாகிராம் மூலம் வெளியாகி இருந்தது. ஆனால் அது சில மணி நேரங்களில் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஈஷா & ஆனந்த் பிராமால்
முகேஷ் அம்பானி மகள் ஈஷா அம்பானிக்கும் அவர்களது குடும்ப நண்பரான அஜய் பிராமல் மகன் ஆனந்த் பிராமலுகுக்கு மே 7ம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
ஆகாஷ் அம்பானி & ஷோலேகா மேத்தா
ஆகாஷ் அம்பானி மற்றும் வைர வியாபாரி ரஸ்ஸல் மேத்தாவின் மகள் ஷோலேகா மேத்தாவிற்கும் ஏப்ரல் மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
திருமணம்
ஒருவேலை ஆனந்த் அம்பானியின் திருமணம் நிச்சயிக்கப்பட்டால் மூன்று திருமணமும் டிசம்பர் மாதம் நடைபெற வாய்ப்புகள் உள்ளது.
பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு..
70 நாட்களில் ரூ.21 லட்சம் சம்பாதித்த குஜராத் விவசாயி..


Click it and Unblock the Notifications