நடிகை பெயரில் 120 கோடி சொத்து வைத்திருக்கிறாரா கர்நாடக முதல்வர் Kumaraswamy..? என்னையா நடக்குது..?

தற்போது கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சராக இருப்பவர் ஹெச்.டி குமாரசாமி (H D Kumaraswamy). இவர் முன்னாள் பிரதமர் தேவ கெளடாவின் மகன். இவர் கர்நாடகாவில் ஜனதா தலம் எனும் பெயரில் கட்சியை தலைவராக இருந்து நடத்தி வருகிறார். நம் எச்டி குமாரசாமி தான் கர்நாடக முதல்வர் வேட்பாளர்களிலேயே பெரிய கோடீஸ்வரர். குமாரசாமிக்கு அடுத்த இடத்தில் சித்தராமையாவும், பாஜக மாநில தலைவரான பிஎஸ் எடியூரப்பாவும் அதிக சொத்துக்களை வைத்திருக்கின்றனர்.

ஆட்சி கைப்பற்றல்

ஆட்சி கைப்பற்றல்

2018 கர்நாடக சட்ட சபைத் தேர்தலில் பாஜக 104  இடங்களை கைப்பற்றி தனிபெரும் கட்சியாக உள்ளது. ஆனால் பெரும்பான்மை கிடைக்காததால் பாஜக ஆட்சியமைப்பதில் சிக்கல் எழுந்த இந்த சைக்கிள் கேப்பை பயன்படுத்தி, மதசார்பற்ற ஜனதாதளம் தலைமையில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைத்துவிட்டார்கள். 

தலைக்கு 100 கோடியா..?

தலைக்கு 100 கோடியா..?

மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியின் எம்எல்ஏக்களை வளைக்க தலைக்கு 100 கோடி ரூபாயும், அமைச்சர் பதவியும் தருவதாக பாஜக எங்கள் எம் எல் ஏ-க்களிடம் சத்தியம் செய்கிறது எனக் கதறினார் நம் குமாரசாமி. ஊழலை ஒழிப்பதாக கூறிய கட்சியிடம் இந்த பணம் எங்கே உள்ளது? எனவும் செய்தியாளர்கள் சந்திப்பில் கேள்வி எழுப்பினார். சரி பழைய கதை எதற்கு நமக்கு... குமாரசாமி சொத்து விவரங்களைப் பார்ப்போம்.

அசையா சொத்து

அசையா சொத்து

2013-ம் ஆண்டுத் தேர்தலில் நின்ற போது 16 கோடியாக இருந்த குமாரசாமியின் சொத்து மதிப்பு 2018-ம் ஆண்டு 43 கோடியாக உயர்ந்துள்ளது. 

 மனைவியின் சொத்துக்கள்

மனைவியின் சொத்துக்கள்

குமாரசாமி மனைவி பெயரில் 2013-ம் ஆண்டு 20 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் இருந்த நிலையில் 2018-ம் ஆண்டு வேட்புமனு தாக்கல் செய்த போது இவரது சொத்து மதிப்பு 124 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முதல் மனைவி அனிதா பெயரிலா... அல்லது இரண்டாவது மனைவி ராதிகா பெயரிலா...? அட ஆமாங்க நம் குமாரசாமி கொளுக் மொளுக் கன்னட நடிகை ராதிகாவை 2006-லேயே கல்யாணம் பண்ணிக்கிடாராம். 2010-ல் நடிகை சொல்லப் போய் தான் செய்தி வெளியே வந்தது.

கடன்

கடன்

ஜேடிஎஸ் மாநில தலைவரான குமாரசாமிக்கு 2.9 கோடி ரூபாய் கடன் இருப்பதாகவும், அவரது மனைவிக்கு 8.1 கோடி ரூபாய் கடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

சித்தராமையா சொத்து மதிப்பு

சித்தராமையா சொத்து மதிப்பு

முன்னாள் முதல்வரான சித்தராமையா அசையும் மற்றும் அசையா சொத்துக்களாக 11.20 கோடி ரூபாய் உள்ளதாகவும், இவரது மனைவி பெயரில் 7.60 கோடி ரூபாய் சொத்துக்கள் இருப்பதாகவும், இந்து கூட்டு குடும்ப விதிகளின் கீழ் 1.55 கோடி ரூபாய் சொத்துக்கள் உள்ளதாகவும் 2018-ம் ஆண்டுத் தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்த போது குறிப்பிட்டு இருந்தார்.

அதே நேரம் சித்தராமையாவிற்கு 2.59 கோடி ரூபாயும், அவரது மனைவிக்கு 2.26 கோடி ரூபாயும் கடன் உள்ளது.

 

எடியூரப்பா

எடியூரப்பா

பாஜகவின் முதல்வர் வேட்பாளரான எடியூரப்பாவிற்கு 4.09 கோடி ரூபாய் சொத்து உள்ளதாக 2018-ம் ஆண்டுக்கான தேர்தல் வேட்புமனுவில் தாக்கல் செய்துள்ளார். இதுவே 2013-ம் ஆண்டு இவரது சொத்து மதிப்பு 5.8 கோடி ரூபாய் உள்ளதாகக் குறிப்பிட்டு இருந்தார்.

கல்வி

கல்வி

தேவகவுடாவின் மகனான குமாரசாமி பெங்களூரு ஜெயநகர் பகுதியில் இருக்கும் நேஷனல் கல்லூரியில் பிஎஸ்சி படித்துள்ளார். தனது பள்ளி கல்வியைப் பெரும்பாலும் பெங்களூரிலேயே  பெற்றுள்ளார். 

குடும்பம்

குடும்பம்

1986இல் குமாரசாமி அனிதாவைத் திருமணம் செய்து கொண்டார், இவர்களுக்கு நிகில் கவுடா என்னும் மகனும் உள்ளார். சமீபத்தில் குமாரசாமி அனிதா இணைந்து தயாரித்த jஜாகுவார் திரைப்படத்தில் நம் நிகில் தான் ஹீரோ. ஆ சொல்ல மறந்துட்டோம். நம்ம குமாரசாமி ஒரு திரைப்பட தயாரிப்பாளரும் கூட.

ராதிகா

ராதிகா

மேலும் 2006ஆம் ஆண்டுக் கன்னட திரைப்பட நடிகையான ராதிகாவை திருமணம்  திருமணம் குறித்து வழக்கு பதிவும் செய்யப்பட்டு விசாரணைக்கு வந்தது. எதேதோ காரணத்தால் நீதிமன்றம் வழக்கை நிராகரித்துவிட்டது. ஆனால் வழக்கு காலங்களில் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் இருந்தது. குமாரசாமி மற்றும் ராதிகா தம்பதிக்கு ஷாத்மிகா கே சாமி என ஒரு பெண் குழந்தையும் உண்டு.

 

முதல் அரசியல் வெற்றி

முதல் அரசியல் வெற்றி

1996ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் ராமநகரா மாநிலத்தின் கனகபுரா பகுதியில் வெற்றிபெற்று முதல் முறையாக அரசியல் வெற்றியை பதிவு செய்தார். இதன் பின் பல இடங்களில் இவர் தோல்வியைச் சந்தித்தாலும் கர்நாடக அரசியலில் இவரது ஆதிக்கம் குறையவில்லை என்றே சொல்ல வேண்டும்.

சினிமா..

சினிமா..

சினிமா ஆர்வத்தில் தயாரிப்பாளராக இருந்த குமாரசாமி ஆர்வக் கோளாரில் விநியோகம் செய்யவும் முயற்சி செய்தார். ஏதோ அதிகாரம் இருப்பதால் ஓகேவாக ஓடிக் கொண்டிருக்கிறது.

சினிமா மீதான குமாரசாமியின் ஆர்வத்துக்கு அவர் கல்லூரியில் படிக்கும்போது கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரைப்  போலவே ஆடை அணிந்து சென்றது சிறந்த எடுத்துக்காட்டு. அந்த அளவுக்கு சினிமா பிடிக்கும். அதனால் தான் நடிகையை கல்யாணம் செய்து கொண்டார் போல. அப்படி இருந்த ஆர்வத்தை 1999இல் சூரிய வம்சா, 2000இல் காலாடே அலியந்ரூ, 2003இல் சந்திர சக்கோரி, 2016இல் ஜாகுவார் ஆகிய திரைப்படத்தைத் தயாரித்து கொஞ்சம் தணித்துக் கொண்டார் போல.

 

ஒலா, உபர் டாக்ஸி

ஒலா, உபர் டாக்ஸி

2017 மார்ச் மாதத்தில் ஒலா, உபர் டாக்ஸி நிறுவனங்களில் பணிபுரியும் ஓட்டுநர்கள் பல்வேறு விதமான பிரச்சனைகளைத் தொடர்ந்து வந்த நிலையில் இவர்களின் பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கக் எச்டி குமாரசாமி ஒரு அதிரடி முடிவை எடுத்தார்.

தனி நிறுவனம்

தனி நிறுவனம்

ஓலா, உபர் நிறுவனங்களைப் போலவே மொபைல் மூலம் டாக்ஸி புக் செய்யும் நிறுவனத்தைத் துவங்கி கர்நாடக மாநிலத்தின் முக்கிய நகரங்களில் இச்சேவையை அளிக்க முடிவு செய்துள்ளதாகவும், இந்த நிறுவனத்தை முழுமையாகத் தனது சொந்த முதலீட்டின் மூலம் உருவாக்க முடிவு செய்துள்ளதாகவும் குமாரசாமி அப்போது தெரிவித்தார்.

யுகாதி

யுகாதி

இந்நிலையில் முதல்கட்டமாகப் பெங்களுரில் ஓலா, உபர் நிறுவனங்களுக்கு எதிராக HDK Cabs என்ற பெயரில் 2017 யுகாதி பண்டிகை அன்று சேவையை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டது.

TYGR கேப்ஸ்

TYGR கேப்ஸ்

ஓலா, உபர் நிறுவனத்திற்குப் போட்டியாகப் பெங்களூரில் TYGR கேப்ஸ் என்னும் நிறுவனத்தைக் குமாரசாமி அவர்களின் முதலீட்டின் வாயிலாகத் துவங்கப்பட்டது. இதில் பிற நிறுவனங்களை விடக் கட்டணங்கள் குறைவாகவும், ஓட்டுநர்களுக்கு அதிகக் கமிஷனும் வழங்குவதாக இந்நிறுவனம் உத்திரவாதம் அளித்துள்ளது.

சிஇஓ

சிஇஓ

2017 முடிவிலேயே இந்நிறுவனத்தில் 10,000க்கும் அதிகமான ஒட்டுநர்கள் இந்நிறுவனத்தில் இணைந்துள்ளதாகவும், இதில் 5,000 பேர் ஆக்டிவாக உள்ளதாவும் TYGR கேப்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சிஇஓ ஆதித்யா போடார் கூறியுள்ளார்.

சேவைகள்

சேவைகள்

தற்போது இந்நிறுவனம் பயணிகள் சேவை மட்டும் அல்லாமல் B2B, B2C பிரிவில் லாஜிஸ்டிக்ஸ் மற்றும் டெலிவரி சேவையும் அளிக்கிறது.

முக்கிய நகரங்கள்

முக்கிய நகரங்கள்

குமாரசாமி அவர்களின் முதலீட்டில் இயங்கும் TYGR கேப்ஸ் தற்போது பெங்களுரில் மட்டும் அல்லாமல் மத்திய பிரதேசம், மும்பை, ஜார்க்கண்ட், கொல்கத்தா ஆகிய நகரங்களிலும் இயங்கி வருகிறது.

TYGR கேப்ஸ்-இன் இணைய தளம் இணைப்பு

 

எடியூரப்பாவின் சொத்து மதிப்பு

எடியூரப்பாவின் சொத்து மதிப்பு

அம்பானி வீட்டில் இருந்து மூன்றாம் திருமணத்திற்கான அறிவிப்பு

அம்பானி வீட்டில் இருந்து மூன்றாம் திருமணத்திற்கான அறிவிப்பு

70 நாட்களில் ரூ.21 லட்சம் சம்பாதித்த குஜராத் விவசாயி..

70 நாட்களில் ரூ.21 லட்சம் சம்பாதித்த குஜராத் விவசாயி..

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+