இந்திய நிறுவனங்களில் பங்கு சந்தை மூலமாக நிதி திரட்டுவதில் பல சாதனைகளைப் படைத்தவர் திருபாய் அம்பானி. 2002-ம் ஆண்டு இவர் இறக்கும் போது 2 மில்லியன் பங்குதார்கள் ரிலையன்ஸ்-ல் முதலீடு செய்து இருந்தனர்.
ரிலையன்ஸ் நிறுவனம் முதன் முதலாகப் பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட போது பல முதலீட்டாளர்களை இவரது தந்திரங்களில் ஈர்த்தார். அன்று சிறிய முதலீடா ரிலையன்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் எல்லாம் இன்று லட்சாதிபதிகளாகவும், கோடீஸ்வர்களாகவும் உள்ளனர். ஆனால் இன்று சூழல் வேறு. ரிலையன்ஸ் நிறுவனம் ஒன்று திவால் ஆகியுள்ளது.
சொத்துப் பிரச்சனை
திருபாய் அம்பானி இறந்த பிறகு முகேஷ் அம்பானி மற்றும் அனில் அம்பானி இடையில் சொத்துப் பிரச்சனை எழுந்தது. பின்னர் 2006-ம் ஆண்டுக் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அப்போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங் போன்றவர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் அனில் அம்பானி வசம் சென்றது.
தேசிய நிறுவன சட்டம் தீர்ப்பாயத்திடம் மனு
ஆர்காம் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் மீது டெலிகாம் சாதனங்கள் உற்பத்தி செய்யும் எரிக்கசன் நிறுவனம் தேசிய நிறுவன சட்டம் தீர்ப்பாயத்திடம் தங்களுக்கு அளிக்க வேண்டிய 1,150 கோடி ரூபாய் வாங்கிக் கொடுக்குமாறு மூன்று மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தினை முகேஷ் அம்பானி துவங்கிய பிறகு ஆர்காம் நிறுவனம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. ஆர்காம் மட்டும் இல்லாமல் டெலினார், ஏர்செல் உள்ளிட்ட நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. ஆர்காம் நிறுவனத்தின் இன்றை நிலைக்கு முக்கியக் காரணம் அனில் மற்றும் முகேஷ் இருவரும் சொத்துக்களைப் பிரித்துக்கொண்டதே ஆகும்.
ஃபோர்ப்ஸ் பட்டியல்
2007-ம் ஆண்டு ஃபோர்ப்ஸ் வெளியிட்ட பில்லியனர்கள் பட்டியலில் அனில் அம்பானிக்கு 45 பில்லியன் டாலர் சொத்துக்கள் இருந்தது. அதில் 66 சதவீதம் ஆர்காம் நிறுவனப் பங்காக இருந்தது. ஆனால் தற்போது இவர் வசம் 3.15 பில்லியன் டாலர் சொத்துக்கள் மட்டுமே உள்ளது.
அதே நேரம் ஃபோர்ப்ஸ் பட்டியலில் 49 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இருந்த முகேஷ் அம்பானிக்கு 2017-ம் ஆண்டுக் கணக்கின் படி 38 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்பு உள்ளதாகக் குறிப்பிடப்பட்டு இருந்தது.
தோல்வியில் முடியும் முடிவுகள்
ஆர்காம் நிறுவனம் தனது சொத்துக்களை விற்றுக் கடனை அடைத்துவிடலாம் என்று பல வகையில் முயன்றும் அதில் உள்ள சட்ட சிக்கல்களாக நெறுக்கடியில் தான் உள்ளார். அன்மையில் ரிலையன்ஸ் இன்ஃப்ரா நிறுவனத்தினை அதான் நிறுவனத்திற்கு விற்கும் முடிவு எடுக்கப்பட்டது.
முகேஷ் அம்பானி
அனில் அம்பானி ஒரு பக்கம் அனைத்து வணிகங்களிலும் நட்டம் அடைந்து வரும் நிலையில் அவரது அண்ணன் முகேஷ் அம்பானி தனது மகன் மற்றும் மகள் உடன் இணைந்து கடந்த சில ஆண்டுகளாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு வேகமாகப் பாடுபட்டு வருகிறார்.


Click it and Unblock the Notifications