வால்மார்ட் நிறுவனம் 16 பில்லியன் டாலர் அளித்துப் பிளிப்கார்ட் நிறுவனத்தினை வாங்கியதை அடுத்து முன்னாள் மற்றும் தற்போதைய ஊழியர்கள் வசம் உள்ள பிளிப்கார்ட்டின் பங்குகளை வாங்க 500 மில்லியன் டாலரினை செலவு செய்ய முடிவு செய்துள்ளது. ஆனால் அதில் முன்னாள் ஊழியர்களுக்கு மட்டும் நியாயமற்றதாக ஒரு முடிவினை வால்மார்ட் எடுத்துள்ளதாகத் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.
ஊழியர்கள் பங்குகள்
பிளிப்கார்ட் நிறுவனத்தில் தற்போது பணிபுரிந்து வரும் ஊழியர்களால் தங்கள் வசம் வைத்துள்ள அனைத்துப் பங்குகளையும் 2 ஆண்டுகளில் விற்க முடியும்.
முன்னாள் ஊழியர்கள் பங்குகள்
ஆனால் முன்னாள் ஊழியர்களாக அப்படிச் செய்ய முடியாது என்றும் 30 சதவீத பங்குகளை மட்டுமே உடனடியாக விற்க முடியும் என்றும் மீத பங்குகளை எப்போது வாங்க இருக்கிறோம் என்ற விவரங்கள் பற்றித் தெரிவிக்கவில்லை.
ஊழியர்கள்
பிளிப்கார்ட் ஊழியர்களைத் தொடர்பு கொண்ட போதும் அவர்கள் பங்குகளை வாங்க வால்மார்ட் முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்தனர். ஆனால் முன்னாள் ஊழியர்களுக்கு ஏன் இந்த நியாயமற்ற நிலை என்று தெரியவில்லை.
முன்னாள் ஊழியர்கள் புலம்பல்
நிறுவனத்தினை விட்டு வெளியேறி தொடர்பில் உள்ளதாக ஊழியர்கள் பங்குகளை ஏன் வால்மார்ட் முழுமையாக வாங்குவதை மறுக்கிறது என்று தெரியவில்லை என்றும் எப்போது மீதம் உள்ள பங்குகளை வாங்கும் என்ற விவரங்களை வால்மார்ட் கூறவில்லை என்று நம்முடன் முன்னால் ஊழியர்கள் கூறினர்.
வால்மார்ட்
இந்திய ஸ்டார்ட்அப் நிறுவன வரலாற்றில் வால்மார்ட் மிகப் பெரிய தொகையினைக் கொடுத்து ஊழியர்களின் பங்குகளை வாங்க இருப்பதாகவும், அதிகபட்சம் 10,000 ரூபாய் ஒரு பங்கு என வாங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications