உலகம் முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் கார்களுக்கு மாற்றாக எலக்ட்ரிக் கார்கள் பயன்படுத்த மக்கள் ஆர்வம் காட்டும் நிலையில், இந்தியாவிலும் மஹிந்திரா, டாடா போன்ற முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இப்பிரிவில் தனிப்பட்ட கவனத்தைச் செலுத்தி வருகிறது.
இதில் மஹிந்திரா நிறுவனம் ஏற்கனவே பல எலக்ட்ரிக் கார்களைத் தயாரித்த சந்தைப்படுத்தி வெற்றி கண்டுள்ளது.
மத்திய அரசு
வல்லரசு நாடுகளைப் போலவே இந்தியாவிலும் எலக்ட்ரிக் கார்களைப் பயன்படுத்த ஏதுவான தளத்தை அமைத்துத் தரும் வகையில் மோடி தலைமையிலான மத்திய அரசு புதிய திட்டத்தை வடிவமைத்துள்ளது.
புதிய திட்டம்
நாட்டில் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்கள் மற்றும் ஸ்மார்ட் சிட்டிகளில் ஒவ்வொரு 3 கிலோமீட்டருக்கும் சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்க முடிவு செய்துள்ளது. இதேபோல் எப்போதும் பிசியாக இருக்கும் தேசிய நெடுஞ்சாலையில் ஒவ்வொரு கிலோமீட்டர் தூரத்திற்கும் சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்க முடிவு செய்துள்ளது.
மானியம்
இத்தகைய சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்க விரும்பும் மக்களுக்கு நகராட்சியிடம் இருந்து நிலத்தை அளிக்கவும், தளத்தை அமைப்பதற்காகக் கருவிகள், கட்டமைப்புகள் ஆகியவற்றை மானிய விலைக்கு அளிக்கவும் திட்டமிட்டுள்ளது.
3-5 வருட திட்டம்
இதன் மூலம் அடுத்த 3-5 வருடத்திற்கு 30,000 ஸ்லோ சார்ஜிங் ஸ்டேஷன், 15,000 பாஸ்ட் சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்கப்பட உள்ளது.
லாபம்
இதன் மூலம் மஹிந்திரா மற்றும் டாடா குழுமத்திற்கு மகிப்பெரிய வர்த்தக வாய்ப்புகள் உருவாகும்.
ஏற்கனவே மஹிந்திரா நிறுவனம், டெஸ்லா இந்தியாவில் தொழிற்சாலை அமைக்காத காரணத்தால் கொண்டாட்டத்தில் இருந்த நிலையில் தற்போது மத்திய அரசின் இத்திட்டம் பெரிய அளவிலான வாய்ப்பை உருவாக்கும். மேலும் டாடா தற்போது மஹிந்திராவுக்குப் போட்டியாக எல்க்ட்ரிக் கார் தயாரிப்பில் இறங்கியுள்ளது.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications