பாங்க் ஆப் இங்கிலாந்தின் கவர்னராக உள்ள மார்க் கார்னியின் பதவிக் காலம் இன்னும் ஒரு வருடத்திற்குள் முடிவடைய உள்ள நிலையில் அந்தப் பதவிக்கு இந்தியாவின் முன்னாள் ஆர்பிஐ கவர்னராக இருந்து ரகுராம் ராஜன் விண்ணப்பிப்பார் என்று கூறப்பட்டு வந்த நிலையில் அதற்கு அவர் அப்படி எந்த எண்ணமும் தனக்கு இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
ரகுராம் ராஜன்
2016-ம் ஆண்டு வரை இந்தியாவின் ஆர்பிஐ கவர்னராக இருந்த ரகுராம் ராஜன் தற்போது சிக்காகோ பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார்.
பேட்டி
லண்டனில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த ரகுராம் ராஜன் "சிகாகோ பல்கலைக் கழகத்தில் எனக்கு மிகவும் நல்ல வேலை இருக்கிறது. நான் உண்மையில் ஒரு கல்வியாளர், ஒரு தொழில்முறை மத்திய வங்கியாளர் அல்ல. நான் இங்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்" என்றும் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு கவர்னர்
இங்கிலாந்து சான்ஸ்லர் பிலிப் ஹேமண்ட் புதிய கவர்னருக்கு ஒரு வெளிநாட்டினரைத் தேர்வு செய்யலாம் என்று பரிந்துரைத்துள்ளார். ரகுராம் ராஜனுடன் சேர்ந்து, பிற சாத்தியமான வெளிநாட்டு வேட்பாளர்களும் முன்னாள் மெக்சிகன் மத்திய வங்கியின் தலைவர் அகஸ்டின் கார்ஸ்டென்ஸும் பாங்க் ஆப் இங்கிலாந்தின் கர்வரான பதவிக்கு விண்ணப்பிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
இங்கிலாந்து கருவூலம்
இங்கிலாந்து கருவூலம் இதுவரை இந்தப் பதவிக்கான விளம்பரத்தினை வெளியிடவில்லை. ஆக மொத்தத்தில் ரகுராம் ராஜன் கூறியிருப்பதைப் பார்க்கும் போது அவருக்குப் பாங்க் ஆப் இங்கிலாந்து கவர்னார் பதவிக்கு விண்ணப்பிக்க விருப்பம் இல்லை என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications