அதீத கடனில் தத்தளித்து வந்த புஷன் ஸ்டீல் நிறுவனத்தைப் பல்வேறு போராட்டங்களுக்குப் பின்பு டாடா ஸ்டீல் வாங்க உள்ளது. இதனால் புஷன் ஸ்டீல் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் மத்தியில் பதற்றமான சூழ்நிலை நிலவியது.
பொதுவாகப் பெரிய நிறுவனங்கள் சிறிய நிறுவனத்தைக் கைப்பற்றும் போது செலவுகளைக் குறைப்பதற்காக ஆட்குறைப்பில் இறங்கும், தற்போது டெலிநார் நிறுவனத்தில் ஏர்டெல் செய்வதும் இதுதான்.
ஆனால் டாடா குழுமம் சற்று வித்தியாசமாக யோசித்துள்ளது.
ஏலம்
புஷன் ஸ்டீல் நிறுவனத்தின் அதீத கடன் நிலுவைக்குத் தீர்வு காணும் முயற்சியாகத் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் அமைப்பு இந்நிறுவனத்தை ஏலம் விட முடிவு செய்தது. இந்த ஏலத்தில் பல நிறுவனங்கள் கலந்துகொண்ட நிலையில் டாடா ஸ்டீல் வெற்றிபெற்றது.
டாடா இலக்கு
தற்போது புஷன் ஸ்டீல் 3-3.5 மில்லியன் டன் அளவிலான ஸ்டீலை உற்பத்தி செய்யும் நிலையில் டாடா நிர்வாகத்தின் கீழ் கண்டிப்பாக இதன் உற்பத்தித் திறனை 4-4.5 மில்லியன் டன் ஆக உயர்த்த முடியும் என டாடா ஸ்டீல் நிறுவனத்தின் தலைவர் நரேந்திரன் தெரிவித்துள்ளார்.
முதலீடு
இதுமட்டும் அல்லாமல் கூடுதல் முதலீடு இருந்தால் புஷன் ஸ்டீல் உற்பத்தி அளவு 5 -8 மில்லியன் டன் வரையில் எளிதாக உயர்த்த முடியும் எனவும் நரேந்திரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஊழியர்கள்
இந்நிறுவனத்தை டாடா கைப்பற்றியதன் மூலம் ஊழியர்கள் வெளியேற்றப்படுவார்கள் என ஊழியர்கள் மத்தியில் பதற்றம் நிலவிய நிலையில் இந்த நிறுவன கைப்பற்றலுக்கு எதிர்ப்பு விளங்கியது.
வேலைவாய்ப்பு
இந்நிலையில் டாடா ஸ்டீல் ஏல விண்ணப்பத்திலேயே இந்நிறுவனத்தின் 5,000 ஊழியர்களையும் டாடா ஸ்டீல் ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்துள்ளது. இதன் மூலம் யாரும் பணிநீக்கம் செய்யப்படமாட்டார்கள் என டாடா தெரிவித்துள்ளது
இதனால் 5000 ஊழியர்கள் வேலைவாய்ப்புகள் தற்போது காப்பாற்றப்பட்டுள்ளது.
35,000 கோடி ரூபாய்
புஷன் ஸ்டீல் நிறுவனத்தை 35,000 கோடி ரூபாய் தொகைக்கு வாங்க டாடா ஸ்டீல் ஒப்புக்கொண்டுள்ள நிலையில் 18,000 கோடி ரூபாயை தனது சொந்த முதலீட்டில் இருந்தும் மீதமுள்ள தொகையைக் கடனாகவும் பெற திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications