இந்தியாவின் மிகப் பெரிய டெலிகாம் நிறுவனமான ஏர்டெல் இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் உடன் இணைந்து எனது முதல் ஸ்மார்ட்போன் என்ற திட்டத்தின் கீழ் 4ஜி ஸ்மார்ட்போன்களை 3,399 ரூபாய் முதல் அளிக்கிறது.
Amazon.in என்ற இணையதளத்தில் 65-க்கும் மேற்பட்ட 4ஜி ஸ்மார்ட்போன்களை இந்தச் சலுகை திட்டங்கள் கீழ் விற்று வருகிறது.
பிராண்டுகள்
சாம்சங், ஒன்பிளஸ், சியோமி, ஹானர், எல்ஜி, லெனோவா, மோட்டோ மற்றும் பிற பிராண்டு ஸ்மார்ட்போஙளும்ம் இந்தச் சலுகையின் கீழ் கிடைக்க உள்ளன.
கேஷ்பேக் ஆஃபர்
எனது முதல் ஸ்மார்ட்போன் திட்டத்தின் கீழ் 4 ஜி ஸ்மார்ட்போன்களை வாங்கும் போது 2,600 ரூபாய் வரை கேஷ்பேக் கிடைக்கும். அதில் 2,000 ரூபாயினை 36 மாதங்களுக்குப் பிறகு அளிக்கும். 600 ரூபாய் amazon.in இணையதளத்தில் ஏர்டெல் எண்ணை ரீசார்ஜ் செய்யும் போது அளிக்கப்படும்.
வரவேற்பு
அமேசான் உடன் ஏர்டெல் நிறுவனம் இணைந்து வழங்கி வரும் இந்த எனது முதல் ஸ்மார்ட்போன் திட்ட சலுகைக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்துள்ளதாகப் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் தலைமை மார்கெட்டிங் அதிகாரி வானி வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.
அமேசான்
Amazon.in மூலம் இந்த வாங்கும் ஸ்மார்ட்போன்களுக்கு இந்தச் சலுகையினை ஏர்டெல் அளிக்கும் நிலையில் வாடிக்கையாளர்களும் 4ஜி ஸ்மார்ட்போனை குறைந்த விலையில் விரும்பி வாங்கி வருவதாகவும் அமேசான் நிறுவனத்தின் மூத்த அதிகாரியான நூர் படேல் தெரிவித்துள்ளார்.
சலுகை எப்படி வழங்கப்படுகிறது?
அமேசான் தளத்தில் ஸ்மார்ட்போனை வாங்கிய பிறகு 18 மாதத்தில் 3,500 ரூபாய் வரை ரீசார்ஜ் செய்தால் முதல் தவணையாக 500 ரூபாய் வாடிக்கையாளர்கள் பெறுவார்கள். அடுத்த 15 மாதத்தில் 3,500 ரூபாய்க்கு வாடிக்கையாளர்களுக்கு ரீசார்ஜ் செய்தால் 1,500 ரூபாய் பெறுவார்கள். இப்படி 2,000 ரூபாய் வரை சலுகையினை ஏர்டெல் அளிக்கிறது.
600 ரூபாய் எப்படி அளிக்கப்படும்?
அமேசான் பே மூலமாக மொபைல் போனை ரீசார்ஜ் செய்யும் போது ஒவ்வொரு மாத ரீசார்ஜிற்கும் 25 ரூபாய் என 24 மாதங்களை வரிப் பெறலாம். குறைந்தது ஒவ்வொரு மாதமும் 169 ரூபாய்க்கு ஏர்டெல் ரீசார்ஜ் செய்ய வேண்டும். இந்தத் திட்டத்தின் கீழ் வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் தினம் 1 ஜிபி தரவு என 24 நாட்களுக்கு அளிக்கப்படும்.
ஜியோ
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தங்களது பிராண்டு பெயரில் பியூச்சர் மற்றும் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்யும் போது இந்தச் சலுகையினை அளித்து வரும் நிலையில் ஏர்டெல் நிறுவனத்தின் இந்தப் பிராண்டட் 4ஜி ஸ்மார்ட்போன் சலுகை பெறும் வரவேற்பைப் பெற்றுவருகிறது. ஜியோ நிறுவனம் 49 ரூபாய் மத ரீசார்ஜ் திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications