விப்ரோ நிறுவனத்தின் இணை நிறுவனரான இந்தியாவின் மூன்றாம் மிகப் பெரிய கோடீஸ்வரரான அசிம் பிரேம்ஜி 2014-ம் ஆண்டு முதன் முதலில் 25 மில்லியன் டாலரினை முதலீடு செய்தார். பின்னர் அந்த நிறுவனத்தினைப் பிளிப்கார்ட் வாங்கியது. அதனை அடுத்துத் தற்போது பிளிப்கார்ட்டினை வால்மார்ட் வாங்கியதை அடுத்து அதுவே 130 மில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
ஏன் இந்த் ரிஸ்க்?
ஆனால் இந்த முதலீட்டைச் செய்ய அசிம் பிரேம்ஜி விவாதித்த போது ஏன் ரிஸ்க் என்று இவருக்குக் கேள்வி எழுந்தாலும் இவருக்குப் பல மடங்கு லாபம் இப்போது கிடைத்துள்ளது.
சில வாரங்களில் உயர்ந்த மதிப்பு
மிந்த்ரா நிறுவனத்தில் அசிம் பிரேம்ஜி முதலீடு செய்த சில வாரங்களில் 1.6 பில்லியன் டாலராக மதிப்பிட்டுப் பிளிப்கார்ட் நிறுவனம் மிந்த்ராவை வாங்கியது. 2015-ம் ஆண்டுப் பிளிப்கார்ட்டின் மதிப்பு 15.2 பில்லியன் டாலராக உயர்ந்தது.
பிரேம்ஜி இன்வெஸ்ட்
பிரேம்ஜி இன்வெஸ்ட் இவரது 3 பில்ல்லியன் டாலர் மதிப்பிலான சொத்துக்களையும் பங்கு சந்தை முதலீடுகளை நிர்வகித்து வருகிறது. இந்தியாவின் மிகப் பெரிய குடும்ப முதலீட்டு நிறுவனமாக இது உள்ளது. மேலும் பிரேம்ஜி இன்வெஸ்ட் 6 பில்லியன் டாலரினை இலக்காக வைத்து தனது பயணத்தினைத் தொடர்கிறது.
பிரேம்ஜி இன்வெஸ்ட் உடன் இது குறித்துத் தொடர்புகொண்ட போது தகவல் அளிக்க மறுத்துவிட்டனர். அசிம் பிரேம்ஜி ஸ்னாப்டீல் நிறுவனத்தில் 152 கோடி ரூபாய் வரை முதலீடு செய்துள்ளார்.
ஆன்லைன் நிறுவனங்களில் முதலீடு
அதுமட்டும் இல்லாமல் பிரேம்ஜி இன்வெஸ்ட் லென்ஸ்கார்ட் கண் கண்ணாடி நிறுவனம் மற்றும் பாலிசி பஜார் உள்ளிட்ட நிறுவனத்தில் 1 பில்லியன் டாலர் வரை முதலீடு செய்துள்ளது என்றும் தகவல்கள் கூறுகின்றன.
பிளிப்கார்ட் - வால்மார்ட்
பிளிப்கார்ட் நிறுவனத்தின் 77 சதவீத பங்குகளை அமெரிக்க ரீடெய்ல் நிறுவனமான வால்மார்ட் 16 பில்லியன் டாலர் கொடுத்து வெற்றிகரமாக வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications