குண்டூசி முதல் விமானம் வரையில் உலகிலேயே மிகப்பெரிய வர்த்தகச் சந்தை கொண்டுள்ள நாடு என்றால் சீனாவிற்கு அடுத்தபடியாக இருப்பது இந்தியா தான். இந்தியாவில் மிகப்பெரிய நுகர்வோர் சந்தையில் உள்ளது இதனை அடைய வேண்டும் என்றே பல ஆயிரம் வெளிநாட்டு நிறுவனங்கள் தற்போது இந்தியாவில் போராடி வருகிறது.
இந்நிலையில் 22,000 கோடி ரூபாய் வர்த்தகச் சந்தையைக் கொண்டுள்ள கார்பனேடெட் சாப்ட் டிரிங்க்ஸ் (கூல்டிரிங்க்ஸ்) பிரிவில் பெப்சி, கோகோ கோலா ஆகிய இரு நிறுவனங்கள் பெரிய அளவிலான ஆதிக்கத்துடன் போட்டி போட்டு வருகிறது.
போட்டி
இந்தியாவில் மவுன்டெயின் டியூ, டிராபிகானா ஜூஸ், லேஸ் சிப்ஸ், குர்குரே ஸ்னாக்ஸ், பெப்சி ஆகியவற்றைத் தயாரித்து விற்பனை செய்யும் பெப்சி கோ நிறுவனம் கோகோ கோலா உடன் போட்டி போட முடியாமல் கூல்டிரிங்க்ஸ் பிரிவில் தொடர்ந்து வர்த்தகத்தை இழந்து வருகிறது.
பிரச்சனை
இது மட்டும் அல்லாமல் பாட்டிலிங் பிரிவில் உயர்மட்ட மற்றும் நடுத்தரப் பிரிவு ஊழியர்கள் அதிகளவில் வெளியேறியதால் வர்த்தகம் பெரிய அளவிலான பாதிப்பை சந்தித்துள்ளது.
சந்தை பங்கீடு
2018இன் முதல் காலாண்டில் சந்தை பங்கீட்டில் கோகோ கோலா 2இலக்க வளர்ச்சியை அடைந்து வரும் நிலையில், பெப்சி சரிவை சந்தித்துள்ளது.
இதற்கு முக்கியக் காரணம் மக்கள் மத்தியில் சர்க்கரை அதிகம் கொண்ட கூல்டிரிங்ஸ்-ஐ குடிப்பதை விடவும் ஜூஸ் குடிக்கும் பழக்கத்திற்கு மாறி வருகின்றனர். இதனால் இரு நிறுவனங்களும் சந்தை பங்கீட்டை இழந்துள்ளது. பெப்சி நிறுவனத்தில் கூடுதலான பிரச்சனைகள் இருக்கும் காரணத்தால் வர்த்தகச் சரிவை சந்தித்துள்ளது.
வர்த்தக மாற்றம்
இந்நிலையில் பெப்சி நிறுவனம் தற்போது ஜூஸ் வகைகளிலும், ஸ்னாக்ஸ் வகைகளிலும் அதிகளவில் கவனத்தைச் செலுத்த திட்டமிட்டுள்ளது. மேலும் இந்நிறுவனத்தின் டொரிட்டோஸ் வர்த்தகத்தை விரிவாக்கும் பணியில் தற்போது பெப்சி கோ ஈடுபட்டுள்ளது.
வர்த்தக வளர்ச்சி
பெப்சிகோ தனது உலகளாவிய வர்த்தகத்தில் 2017ஆம் ஆண்டு 4வது காலாண்டில் 1 இலக்க வளர்ச்சி அடைந்த நிலையில் 2018 முதல் காலாண்டில் 2 இலக்க வளர்ச்சி அடைந்துள்ளது.
லாபம்
வெறும் கூல்டிரிங்கஸ் மட்டும் நம்பியிருக்காமல் ஸ்னாக்ஸ் பிரிவில் முன்கூட்டியே திட்டமிட்டு அதிகளவில் முதலீடு செய்த நிலையில் தற்போதைய வர்த்தகச் சரிவை ஸ்னாக்ஸ் பிரிவின் வாயிலாக லாபத்தைப் பெற்றுள்ளது. தற்போது இப்பிரிவும் பெப்சிகோவின் முக்கிய வர்த்தகப் பிரிவாக மாறியது மட்டும் அல்லாமல் அதிக லாபம் அளிக்கும் பிரிவாகவும் விளங்குகிறது.


Click it and Unblock the Notifications