இந்திய டெலிகாம் சந்தையில் ஜியோ அறிமுகமான பிறகு அதிகளவில் பாதிக்கப்பட்ட நிறுவனங்களில் ஒன்றான ஆர்காம் தற்போது 45,733 கோடி ரூபாய் கடனில் மிதக்கிறது.
இந்நிலையில் கடந்த 2 நாள் வர்த்தகத்தில் மட்டும் இந்நிறுவனத்தின் பங்குகள் சுமார் 100% சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது.
வழக்கு
இந்நிறுவனத்தின் சேவைகளை நிர்வாகம் செய்ய எரிக்சன் நிறுவனத்துடன் ஆர்காம் மற்றும் அதன் இரண்டு கிளை நிறுவனங்களான ரிலையன்ஸ் டெலிகாம் மற்றும் ரிலையன்ஸ் இன்பராடெல் ஆகிய 7 வருட ஒப்பந்தத்தை 2014இல் செய்தது.
டிசம்பர் 2017
ஜியோ அறிமுகத்திற்குப் பின்பு இந்நிறுவனத்தின் வர்த்தகம் அதிகளவிலான சரிவை சந்தித்த நிலையில் டிசம்பர் 2017இல் ஜியோ நிறுவனமே இந்நிவனத்தின் வையர்லெஸ் வர்த்தகத்தை வெளியிடப்படாத தொகைக்கு வாங்க முடிவு செய்து இரு நிறுவனங்களும் ஒப்பந்தம் செய்தது.
பிரச்சனை
இந்நிலையில் ஆர்காம், எரிக்சன் நிறுவனத்திற்குச் சுமார் 1,154 கோடி ரூபாய் தொகையை நிலுவை வைத்துள்ள நிலையில், நிறுவன சட்ட தேசிய தீர்ப்பாயத்தில் எரிக்சன் வழக்குத் தொடுத்தது.
இந்த வழக்கின் மூலம் ஆர்காம், ஜியோ வர்த்தகப் பரிமாற்றம் செய்யத் தடை விதிக்கப்பட்டது.
கடன்
ஆர்காம், ஜியோ வர்த்தகப் பரிமாற்றத்தின் வாயிலாகவே அனில் அம்பானி தன் நிறுவனத்தின் மீதுள்ள 7 பில்லியன் டாலர் கடனை தீர்க்க திட்டமிட்டார். எரிக்சன் வழக்கால் இது தடைபெற்றது.
இறுதி முடிவு
இந்நிலையில் எரிக்சன் நிறுவனத்தின் நிலுவை தொகை பிரச்சனையை நீதிமன்றத்திற்கு வெளியில் முடித்துக்கொள்ளலாம் என ஆர்காம் மற்றும் எரிக்சன் முடிவு செய்தது.
இதன் பிடி ஆர்காம் நிறுவனத்தின் சுமார் 1.21 மில்லியந் பங்குகளைப் பல்க் டீலாக எரிக்டன் நிறுவனத்திற்குக் கைமாற்றப்பட்டுள்ளது.
பங்கு மதிப்பு
இதனால் புதன் மற்றும் வியாழக்கிழமை வர்த்தகத்தில் ஆர்காம் நிறுவன பங்குகள் சுமார் 102 சதவீதம் வரையில் உயர்ந்து அதிகப்படியாக 20.65 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்டது.
2018ஆம் ஆண்டில் மட்டும் ஆர்காம் நிறுவன பங்குகள் சுமார் 49 சதவீதம் வரையில் சரிவை சந்தித்துள்ளது.


Click it and Unblock the Notifications