பெட்ரோல், டீசல் விலை உயரும் போது எல்லாம் கச்சா எண்ணெய் டெரிவேட்டிவ்ஸ் மீதான மத்திய அரசு உயர்த்துவது வழக்கம். அதன் ஒரு கட்டமாக மத்திய அரசு 3 முதல் 5 ரூபாய் வரை கச்சா எண்ணெய் டெரிவேட்டிவ்ஸ் மீதான வரி வரம்புகளை உயர்த்த முடிவு செய்துள்ளது என்றும் இதற்காக அறிவிப்பு இன்னும் ஒரு வாரத்தில் வர வாய்ப்புள்ளதாகவும் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.
பெட்ரோல், டீசல் விலை உயருமா?
மத்திய அரசு கச்சா எண்ணெய் மீதான வரி வரம்புகளை உயர்த்தினாலும் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு போன்றவற்றுக்கு விலக்கு அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டெரிவேட்டிவ்கள் என்றால் என்ன?
கச்சா எண்ணெய்யினை ரீஃபைன் செய்யும் போது டெரிவேட்டிவ்கள் கிடைக்கும். மோனோமர், பாலிமர், பாலீஸ்தர், வாக்ஸ் என 76 பொருட்கள் கச்சா எண்ணெய் டெரிவீட்டிவிகளில் இருந்து எடுக்கப்படுகிறது. தற்போது கச்சா எண்ணெய் டெரிவேட்டிவ்ஸ் மீதான வரியை உயர்த்தும் போது இந்தப் பொருட்கள் மீதான விலை எல்லாம் உயர வாய்ப்புள்ளது.
ஏன் இந்த விலை உயர்வு?
கச்சா எண்ணெய் உயர்வால் பெட்ரோல், டீசல் போன்ற எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களுக்கு மார்ஜினில் ஏற்படும் இழப்பினை சரி கட்டவே இந்த டெரிவேட்டிஸ் மீதான வரி உயர்வு ஆகும்.
எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள்
எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களான இந்தியன் ஆயில், இந்துஸ்தான பெட்ரோலியம் கார்ப், பாரத் பெட்ரோலியம் மற்ற பிற பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களின் நட்டத்தினை ஈடுகட்ட வேண்டும் எண்ணெய் துறை அமைச்சகம் நிதி அமைச்சகத்திடம் கோரிக்கை வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications