கூகிள், அமேசான் இடையிவ் கடும் போட்டி.. டார்கெட் 'இந்தியா'..!

உலகின் மிகப்பெரிய டெக்னாலஜி நிறுவனங்களான கூகிள் மற்றும் அமேசான் நிறுவனம் மிகப்பெரிய வர்த்தக யுத்தத்திற்குத் தயாராகி வருகிறது. இந்தப் போரில் இரு நிறுவனங்களுக்கும் முக்கியமான இலக்கே இந்தியாவும், இந்திய மக்களும் தான்.

இந்திய ஈகாமர்ஸ் சந்தையில் வர்த்தகப் போட்டி மிகப்பெரிய அளவில் வெடித்துள்ளது, இதைப் பயன்படுத்தி முக்கியமான இலக்காகக் கொண்டு கூகிள் மற்றும் அமேசான் களமிறங்கியுள்ளது.

தோல்வி

தோல்வி

அமெரிக்க நிறுவனங்களுக்குச் சீனாவில் கடுமையான எதிர்ப்புகள் இருக்கிறது. கூகிள் தனது வர்த்தகத்தை 2010ஆம் ஆண்டில் முடித்துக்கொண்டு முழுமையாகச் சீனாவை விட்டு வெளியேறியது. அமேசான் நிறுவனம் 1 சதவீதத்திற்கும் குறைவான சந்தை வர்த்தகத்தை மட்டுமே உள்ளது.

சட்ட திட்டங்கள்

சட்ட திட்டங்கள்

சீனா தனது நாடு நிறுவனங்களுக்கு மட்டுமே எளிமையான வர்த்தகத்தைச் செய்யச் சட்ட திட்டங்களை வகுத்துள்ளதால் வெளிநாட்டு நிறுவனங்களால் வர்த்தகம் செய்ய முடியாமல் உள்ளது.

இந்தியா

இந்தியா

இந்நிலையில் நுகர்வோர் சந்தையில் சீனாவிற்கு அடுத்தாக இருப்பது இந்தியா.

மேலும் இந்தியா அன்னிய முதலீட்டு ஈர்ப்பதற்காக வெளிநாட்டு நிறுவனங்களைச் சிவப்புக் கம்பளத்தை விரித்து வரவேற்கிறது. மேலும் இந்தியாவில் தற்போது 500 மில்லியன் மொபைல் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இது 2030இல் 1 பில்லியன் என்ற மிகப்பெரிய அளவை அடையும்.

 

வாடிக்கையாளர்கள்

வாடிக்கையாளர்கள்

இந்தியாவில் வெளிநாட்டு நிறுவனங்கள் வர மக்கள் தொகை மட்டும் காரணமில்லை, மொபைல் வாடிக்கையாளர்கள் மட்டும் 500 மில்லியன், விலை அளவுகளைக் கருத்தில் கொண்டு ஷாப்பிங் செய்யும் மக்களின் எண்ணிக்கை 300 மில்லியன்.

டெக் நிறுவனங்கள்

டெக் நிறுவனங்கள்

இதுவே அமேசான், கூகிள் போன்ற முன்னணி டெக் நிறுவனங்கள் இந்தியாவில் அதிகளவில் முதலீடு செய்யவும் வர்த்தகம் செய்ய ஆர்வமாக இருக்க முக்கியக் காரணம்.

ஈகாமர்ஸ் சந்தையில் கூகிள்

ஈகாமர்ஸ் சந்தையில் கூகிள்

கூகிள் நிறுவனம் இந்திய ஈகாமர்ஸ் சந்தையில் இதுவரை நேரடியாக இல்லை, ஆனாலும் தற்போது பிளிப்கார்ட் வால்மார்ட் நிறுவனத்தைக் கைப்பற்றிய பின்பு பிளிப்கார்ட் நிறுவனத்தில் 1 முதல் 2 பில்லியன் டாலர் வரையில் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது.

இதன் மூலம் அமெரிக்காவில் வால்மார்ட் உடன் கூகிள் இணைந்து வர்த்தகம் செய்வது போல இந்தியாவிலும் தனது வேலையைத் துவங்க உள்ளது கூகிள்.

 

மிகப்பெரிய கூட்டணி

மிகப்பெரிய கூட்டணி

இது அமேசானின் இந்திய வர்த்தகத்திற்குப் பெரிய அளவிலான பாதிப்பை உருவாக்கும் எனக் கணிப்புகள் கூறுகிறது. இதனை எதிர்கொள்ளவே அமேசான் கூடுதலாக முதலீடு செய்யத் திட்டமிட்டு வருகிறது.

தற்போது அமேசான் எதிர்கொள்ளப்போவது பிளிப்கார்ட் நிறுவனத்தை மட்டுமல்ல. பிளிப்கார் - வால்மார்ட் - கூகிள் என்னும் மிகப்பெரிய கூட்டணி.

 

சக்தி

சக்தி

விற்பனை யுக்தி, நிறுவன கூட்டணி ஆகியவற்றுக்கு வால்மார்ட். இணையதளம் மூலம் மக்களை நேரடியாகத் தொடர்புகொள்ளவும் பொருட்களை இந்தியா முழுவதும் ஹோம் டெலிவரி செய்யவும் பிளிப்கார்ட். சர்ச் இன்ஜின், ஆன்லைன் விளம்பரம், மக்களைத் தொடர்ந்து வால்மார்ட், பிளிப்கார்ட் பொருட்களை வாங்க வைக்கக் கூகிள் என மிகப்பெரிய சக்தியாக உருவெடுக்க உள்ளது இக்கூட்டணி.

மேலும் கூகிளின் முதலீடு மூலம் என்ன செய்யப்போகிறது என்பது இதுவரை தெரிவிக்கவில்லை என்றால் அடிப்படையாகவே இதைக் கூகிளால் செய்ய முடியும்.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+