சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக உயர்ந்து வரும் நிலையில் மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் இந்தியன் ஆயில் நிறுவனம் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையைத் தினசரி உயர்த்தி வருகிறது. இதனால் தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
35 பைசா உயர்வு
ஞாயிற்றுக்கிழமை காலையில் இந்தியன் ஆயில் நிறுவனம் ஒரு லிட்டர் பெட்ரோல் விலையை 0.35 பைசா வரையில் உயர்த்தியுள்ளது. இதனால் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 79.13 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 71.32 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 7 நாட்களாகத் தொடர்ந்து பெட்ரோல், டீசல் உயர்ந்து வருகிறது.
80 டாலர்
கச்சா எண்ணெய் சந்தையில் சில மாதங்களுக்கு முன்பு ஒரு பேரல் 45 டாலருக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 80 டாலரைத் தொட்டுள்ளது. இப்படிச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும் போதும் மத்திய அரசு இதன் பெட்ரோல் டீசல் மீதான வரியைக் குறைத்து மக்களுக்கு ஏதுவான வகையில் விலையைக் குறைக்கும்.
வரிக் குறைப்பு
ஆனால் இதை மத்திய அரசு இன்னும் செய்யவில்லை என்பதே தற்போதைய மக்களின் பிரச்சனை. மத்திய அரசு தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனையில் இருந்து கிடைக்கும் வருமானத்தை விடக்கூடாது என்பதற்காக வரியைக் குறைக்காமல் தொடர்ந்து கல்லாக்கட்டி வருகிறது.
வரலாறு
2013-2014 காலகட்டத்தில் சர்வதேச கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் பிரென்ட் க்ரூடு 90 டாலர் முதல் 101 டாலர் வரையில்உயர்ந்தது, ஆனால் அப்போது ஆட்சியில் இருந்து மன்மோகன் சிங் தலைமையிலான அரசு பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைத்து விலையைக் கட்டுக்குள் வைத்தது.
இக்காலகட்டத்தில் இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோலின் அதிகப்படியான விலை (சென்னை) 79.55 ரூபாய், கச்சா எண்ணெய் விலை 92 டாலர். குறைவான விலை 65.9 ரூபாய்.
மிகவும் குறைவான விலை
ஜனவரி 15, 2016 ஜனவரி 15, 2016இல் பிரென்ட் க்ரூட் கச்சா எண்ணெய் விலை 35.55 டாலர் என்ற மிகக் குறைவான விலையில் வர்த்தகம் செய்யப்பட்ட நிலையிலும் இந்தியாவில் பெட்ரோல் விலை 59.45 ரூபாயாகவும், டீசல் விலை 45.36 ரூபாயாகவும் வர்த்தகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
திங்கட்கிழமை
இந்நிலையில் திங்கட்கிழமை வர்த்தகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 30 பைசாக்குக்கும் அதிகமாக உயரும் கணிக்கப்பட்டுகிறது. இதன் மூலம் அடுத்தச் சில நாட்களில் சென்னையில் பெட்ரோல் விலை 80 ரூபாயைத் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications