இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து 8 நாட்களாக உயர்ந்து மக்களை வாட்டி வதைக்கிறது, இதுமட்டும் அல்லாமல் தொடர் உயர்வின் காரணமாகத் தற்போது இதன் விலை உச்சத்தை அடைந்துள்ளது.
இந்நிலையில் பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் முக்கியமான விஷயத்தைக் கூறியுள்ளார்.
மத்திய அரசு பயங்கரப் பிசி..
மத்திய அரசு நாட்டின் வளர்ச்சி, பொருளாதார, மக்கள் நலன் சார்ந்த பணிகளைச் செய்யாமல் கர்நாடகாவில் ஆட்சி அமைக்கத் தலைகீழாக நின்று முயற்சி செய்து தோற்றுப்போனது. கர்நாடக மாநில தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே கிட்டத்தட்ட 15 நாட்களாகப் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தாமல் நாடகமாடியது.
தேர்தலுக்குப் பின்
இந்நிலையில் தேர்தல் கடந்த சனிக்கிழமை முடிந்த நிலையில், திங்கட்கிழமை முதல் பெட்ரோல் விலை உயர் துவங்கியது.
இந்நிலையில் கடந்த 8 நாட்களாகத் திங்கட்கிழமை (21-05-2018) வரை தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.
தர்மேந்திர பிரதான்
தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலைக்குத் தீர்வு காணப்படும், தற்போது உயர்ந்து வரும் விலை அளவுகள் இந்திய மக்களையும், குறிப்பாக நடுத்தர மக்களை அதிகளவில் பாதிக்கிறது. OPEC நாடுகளில் கச்சா எண்ணெய் உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது. இது எங்கள் கையில் இல்லை, இந்திய அரசு இதற்கு விரைவில் தீர்வு காணும் எனப் பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
ஈரான் ஒப்பந்தம்
மேலும் ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறியதும், அமெரிக்கா இந்நாட்டின் மீது வர்த்தகத் தடை விதிக்கத் திட்டமிட்டுள்ள நிலையிலும், கச்சா எண்ணெய் சந்தையில் கூடுதல் பிரச்சனை உருவாகியுள்ளது எனவும் பிரதான் கூறினார்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications