அரசு நிதியை நீக்கிவிட்டு மக்களின் சொத்துக்களை ஆய்வு செய்து பணக்கார நாடுகள் பட்டியலை ஆர்பிஏசியா பேங் குளோபல் வெல்த் மைகிரேஷன் என்னும் அமைப்பு வெளியிட்டுள்ளது.
இது மக்களின் சொத்து, பண இருப்பு, பங்கு இருப்பு, வர்த்தகம் ஆகியவற்றைக் கணக்கில் எடுத்துக்கொண்டு செய்யப்பட்ட நிலையில் இது ஒவ்வொரு நாட்டின் மக்களின் செல்வம் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்களின் வாழ்வியல் மற்றும் செல்வம் குறித்துத் தெரிந்துகொள்ள முடியும் என இவ்வமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தியா
ஆர்பிஏசியா பேங் குளோபல் வெல்த் மைகிரேஷன் அமைப்பு செய்த ஆய்வின் படி இந்திய மக்களின் மொத்த செல்வம் 8,230 பில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது நிலையில் உலகின் பணக்கார நாடுகள் என்னும் இப்பட்டியலில் இந்தியா 6வது இடத்தைப் பெற்றுள்ளது.
முதல் இடம்
வழக்கம்போல் சந்தேகத்திற்கு இடமின்றி அமெரிக்கா 62,584 பில்லியன் டாலர் உடன் முதல் இடத்திலும், சீனா 24,803 பில்லியன் டாலருடன் 2வது இடத்திலும், 19,522 பில்லியன் டாலருடன் ஜப்பான் 3வது இடத்திலும் உள்ளது.
மக்கள் தொகை
இந்தப் பட்டியலில் மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடுகளுக்கு டாப் 10 பட்டியலில் இடம்பெற அளவிலான வாய்ப்புகள் கிடைத்துள்ளது.
பிரிட்டன் முதல் இத்தாலி வரை
அதேபோல் பிரிட்டன் 9,919 பில்லியன் டாலர் உடன் 4வது இடத்திலும், ஜெர்மனி 9,660 பில்லியன் டாலர் மதிப்பில் 5வது இடத்தையும், இந்தியா 6வது இடத்தையும், ஆஸ்திரேலியா 6,142 பில்லியன் டாலர் உடன் 7வது இடத்தையும்,, கனடா 6,393 பில்லியன் டாலர் மதிப்புடன் 8வது இடத்தையும், பிரான்ஸ் 6,649 பில்லியன் டாலர் மதிப்புடன் 9வது இடத்தையும், இத்தாலி 4,276 பில்லியன் டாலர் உடன் 10வது இடத்தையும் பிடித்துள்ளது.
முக்கியக் காரணிகள்
இந்தியாவில் இவ்வளவு பெரிய வளம் உருவாக்க முக்கியக் காரணமாக அமைந்தது, அதிகளவிலான தொழில்முனைவோர்கள், சிறந்த கல்வி அமைப்பு, ஐடி துறையில் ஏற்பட்ட மிகப்பெரிய வளர்ச்சி ஆகியவை முக்கியமாக இருந்தது. இதுமட்டும் அல்லாமல் வர்த்தக வாய்ப்புகள், ரியல் எஸ்டேட், சுகாதாரம், மீடியா ஆகிய துறைகள் கடந்த 10 வருடத்தில் சுமார் 200 சதவீதம் வளர்ச்சி அடைந்து அசத்தியுள்ளது.
2027இல்..
அடுத்த 10 வருடத்தில் சீனா மக்களின் மொத்த சொத்து மதிப்பு 69,449 பில்லியன் டாலராகவும், அமெரிக்காவின் சொத்து மதிப்பு 75,101 பில்லியன் டாலராகவும் உயரும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் இந்தியா 2027இல் பிரிட்டன், ஜெர்மனி நாடுகளைப் பின்னுக்குத் தள்ளி இப்பட்டியலில் 4வது இடத்தைப் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications