சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 79 டாலருக்கும் குறையாமல் இருக்கும் நிலையில் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்த வண்ணம் உள்ளது. மத்திய அரசும் வருமான நோக்கத்திற்காக இதன் மீதான வரியைக் குறைத்தது விலையைக் கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறது.
திங்கட்கிழமை சென்னையில் பெட்ரோல் விலை 35 பைசா உயர்ந்து 79.47 ரூபாய்க்கும், டீசல் விலை 71.59 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பெட்ரோல், டீசலில் தொடர் விலை உயர்வால் காய்கறி, பழங்கள், உணவுப் பொருட்கள் ஆகியவற்றின் விலை அதிகளவில் உயரப் போகிறது. சாமானிய மக்கள் தினசரி பயன்படுத்தும் காய்கறி, உணவுப் பொருட்கள் அனைத்தும் போக்குவரத்தை நம்பியிருக்கும் காரணத்தால் இதன் விலை உயர உள்ளது.
உலகச் சந்தையில் தற்போது கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 79.09 டாலருக்கு விற்பனை செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications