மோட்டார் சைக்கிள் உலகில் சைக்கிளின் பயன்பாடு குறைந்த வந்தாலும் தற்போது பெரும்பாலான இளைஞர்கள் மத்தியில் உடல் நலத்திற்காகச் சைக்கிள் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஹீரோ சைக்கிள் நிறுவனம் இந்தியாவின் மிகக் குறைந்த விலை சைக்கிளினை 1,999 ரூபாய்க்கு விற்கத் தயாரித்து வருவதாகத் தெரிவித்துள்ளது.
அப்கிரேடட் ரோட்ஸ்டர் மாடல் சைக்கிள்
பள்ளி செல்லும் போது பலரும் ஹீரோ சைக்கிள்களைப் பயன்படுத்தி வந்த நிலையில் தினமும் வேலைக்குச் செல்வதற்காகச் சைக்கிளினை பயன்படுத்த விரும்புபவர்கள் இந்த அப்கிரேடட் ரோட்ஸ்டர் மாடல் சைக்கிளினை வாங்கிப் பயன்படுத்துவார்கள் என்று ஹீரோ நிறுவனம் எதிர்பார்க்கிறது.
புதிய வடிவம்
புதிய ரோட்ஸ்டர் மாடல் சைக்கிள் பழைய சைக்கிளை போன்று இல்லாமல் புதிய வடிவத்தில் இருக்கும் என்றும் இதற்கான பணிகள் முழு வீட்டுசுடன் நடைபெற்று வருவதாகவும் ஹீரோ சைக்கிள் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பங்கஜ் முஞ்சால் தெரிவித்துள்ளார்
விலை குறைப்பு
சென்ற மாதம் பங்கஜ் முஞ்சால் அடிப்படை ஹீரோ சைக்கிள்களின் விலையினை 500 ரூபாய் வரை குறைப்பதாகத் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எப்போது சந்தைக்கு வரும்
ஹீரோ நிறுவனம் விரைவில் இந்தச் சைக்கிள் சந்தைக்கு வரும் என்று அறிவித்துள்ள நிலையில் எப்போது என்பதைத் தெரிவிக்கவில்லை. அதே நேரம் விலை குறைவு என்பதற்காகத் தரத்தில் எந்தக் குறையும் இருக்காது என்று ஹீரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 25-ம் தேதி முதன் முதலாக இந்தச் சிக்கிள் திட்டம் குறித்துத் தெரிவித்து இருந்த முஞ்சால் 60 நாட்களில் அதாவது ஜூன் இறுதிக்குள் சந்தைக்கு விற்பனைக்கு வரும் என்று குறிப்பிட்டிருந்தார்.
குறைந்த விலை பைக்
ஹீரோ நிறுவனம் குறைந்த விலை பைக் ஒன்றை ரகசியமாகத் தயாரித்து வருவதாகத் தகவல்கள் கூறுகின்றன.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications