ஜப்பானின் சாப்ட்பாங்க் வசம் இருந்த பிளிப்கார்ட்டின் 21 சதவீத பங்குகளை வால்மார்ட் நிறுவனத்திற்கு விற்பதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தற்போது அதனை முழுமையாக விற்க முடிவு செய்துள்ளதாகத் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.
சென்ற வாரம் முதலே சாப்ட் பாங்க் தங்கள் வசம் உள்ள பிளிப்கார்ட் பங்குகளை விற்று விட்டுப் பிற ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீடு செய்யும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் அது தற்போது உறுதியாகியுள்ளது.
மதிப்பு எவ்வளவு?
ஜப்பான் நிறுவனமான சாப்ட்பாங்க் பிளிப்கார்ட் நிறுவனத்தில் 16,750 கோடி ரூபாய் முதலீடு செய்து இருந்தது. தற்போது இந்த விற்பனையின் மூலம் 26,800 கோடி ரூபாயினைச் சாப்ட்பாங்க் பெற இருக்கின்றது.
முதலீடு
சென்ற வாரம் அடுத்து வரும் 10 ஆண்டுகளில் இந்திய நிறுவனங்களில் 10 பில்லியன் டாலர் வரை முதலீடு செய்ய இருப்பதாகச் சாப்ட்பாங்க் தலைமை நிர்வாக அதிகாரியான மசயோசி சன் தெரிவித்து இருந்தார். அப்போதே இவர் பிளிப்கார்ட் பங்குகளை விற்க உள்ளார் என்று செய்திகள் வந்தன.
சாப்ட்பாங்க்
இரண்டு வாரங்களுக்கு முன்பு பிளிப்கார்ட் நிறுவனத்தின் 77 சதவீத பங்குகளை வால்மார்ட் 16 பில்லியன் டாலர் அளித்து வாங்கிய நிலையில் 21 சதவீத பிளிப்கார்ட் பங்குகளை வைத்து இருந்த சாப்ட்பாங்க் அதனை விற்பது குறித்து முடிவு செய்யாமல் இருந்தது.
வால்மார்ட் பங்குகள் சரிவு
பிளிப்கார்ட் நிறுவனத்தினை வாங்கிய அடுத்த நாளே வால்மார்ட் பங்குகள் சரிந்த நிலையில் சாப்ட்பாங்க் வசம் உள்ள பிளிப்கார்ட்டின் பங்குகள் தான் இதற்காகக் காரணங்கள் என்று கூறப்பட்டது.
ஸ்னாப்டீல்
சாப்ட்பாங்க் நிறுவனம் அடுத்தகட்டமான மீண்டும் ஸ்னாப்டீல் நிறுவனத்தில் முதலீடுகளை அதிகரிக்கத் திட்டமிட்டு இருப்பதாகவும் ஆனால் எவ்வளவு என்று மட்டும் முடிவு செய்யவில்லை என்று மசயோசி சன் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications