ஆன்லைன் டாக்ஸி நிறுவனமான ஓலா தனது வர்த்தகத்தை இந்தியாவைத் தாண்டி வெளிநாட்டுக்கு விரிவாக்கம் செய்துள்ளது. 2018ஆம் ஆண்டில் ஓலா தனது சேவையை ஆஸ்திரேலியா நாட்டின் பெர்த், சிட்னி, மெல்போர்ன் ஆகிய நகரங்களில் அறிமுகம் செய்தது.
ஆஸ்திரேலியாவில் வர்த்தகத்தைத் துவங்கி சில மாதங்களே ஆன நிலையில் அடுத்த 3 முக்கிய நகரங்களுக்குத் தனது சேவையை விரிவாக்கம் செய்து அசத்தியுள்ளது ஓலா.

தற்போது ஓலா நிறுவனம் பிரிஸ்பேன், கோல்டு கோஸ்டு, கேன்பெரா ஆகிய நகரங்களுக்குச் சேவை அளிக்கத் துவங்கியுள்ளது.
இந்த 6 பகுதிகளில் இருக்கும் மக்கள் ஓலா செயலியின் வாயிலாக டாக்ஸிகளைப் புக் செய்துகொள்ள முடியும் என ஓலா ஆஸ்திரேலியா வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஜனவரி 30ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் வர்த்தகத்தைத் துவங்கிய ஓலா இதுவரை சுமார் 30,000 ஒட்டுனர்கள் இணைந்துள்ளது. அடுத்தச் சில மாதங்களில் ஓலா தனது சேவையை அடிலெய்டு, டார்வின் மற்றும் ஹோபார்ட் ஆகிய பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்ய உள்ளது.


Click it and Unblock the Notifications