இந்தியாவின் மிகப் பெரிய வங்கி நிறுவனமான பாரத ஸ்டேட் வங்கி மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் 7,718 கோடி ரூபாய் நட்டம் அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. ஒரு வருடத்திற்கு முன்பு இதே காலாண்டில் 11,740 கோடியாக இருந்த எஸ்பிஐ வங்கியின் வாரா கரன் மதிப்பு மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 4-ம் காலாண்டில் 22,096 கோடியாக அதிகரித்துள்ளது.
இதுவே டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த 3ம் காலாண்டில் எஸ்பிஐ வங்கியின் வாரா கடன் மதிப்பு 18,876 கோடி ரூபாயாக இருந்தது.
தொடர் நட்டம்
பொதுத் துறை வங்கி நிறுவனமான எஸ்பிஐ சென்ற ஆண்டு 4-ம் காலாண்டு முடிவில் 3.442 கோடி ரூபாய் நட்டம் அடைந்ததாகத் தெரிவித்தது. முதன் முறையாகத் தொடர்ந்து 4 காலாண்டில் எஸ்பிஐ வங்கி நட்டத்தினைப் பதிவு செய்துள்ளது.
வாரா கடன்
அக்டோபர் - டிசம்பர் மாத காலாண்டில் 10.35 சதவீதமாக இருந்த மொத்த வாரா கடன் அளவு 10.91 சதவீதமாக உயர்ந்துள்ளது.
வட்டி வருவாய்
சென்ற வருடம் 18,070.7 கோடி ரூபாயாக இருந்த எஸ்பிஐ வங்கியின் நிகர வட்டி வருவாய் 10.5 சதவீதம் உயர்ந்து 19,974 கோடி ரூபாயாக 4-ம் காலாண்டில் பெற்றுள்ளது.
கார்ப்ரேட் பாங்கிங்
சென்ற ஆண்டின் 4-ம் காலாண்டில் 4,845.41 கோடியாக இருந்த எஸ்பிஐ வங்கியின் கார்ப்ரேட் வங்கிகள் செயல்பாடுகளின் நட்டம் 2017-2018 நிதி ஆண்டின் 4-ம் காலாண்டில் 2.79 மடங்கு அதிகரித்து 13,525.40 கோடி ரூபாயாக உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
ரீடெயில் பாங்கிங்
ரீடெய்ல் வங்கி சேவையில் 42.64 சதவீதம் என 3,586.57 கோடி ரூபாய் நிகர நட்டம் அடைந்துள்ளதாக எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.
பங்குகள்
எஸ்பிஐ பங்குகள் இன்று சந்தை நேர முடிபில் 9.05 புள்ளிகள் என 3.69% உயர்ந்து 245.15 ரூபாய் ஒரு பங்கு என வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications