டெல்லி: டாபர் நிறுவன இயக்குநரான பிரதிப் பர்மனிடம் இருந்து செவ்வாய்க்கிழமை அமலாக்கத் துறை கணக்கில் வராத 20.87 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களைப் பரிமுதல் செய்துள்ளது. அந்நியச் செலாவணி முகாமைச் சட்டத்தின் (FEMA) பிரிவின் பிரிவு 37A இன் கீழ் அந்தச் சொத்துக்களை அமலாக்கத் துறை கைப்பற்றியுள்ளது.
பிரதிப் பர்மன்
இந்திய டாபர் நிறுவனத்தின துணை நிறுவனமான டாபர் நேபாள் பிரைவேட்டட் லிமிடட் நிறுவன தலைவரான பிரதிப் பர்மன் , சனத் பிராடக்ட்ஸ் மற்றும் ஆயூர்வேத் லிமிடட் நிறுவனங்களின் தலைவராகவும் உள்ளார்.
அரசு பத்திரங்கள் பரிமுதல்
பிரதிப் பர்மன் மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் படிப்பை முடித்த உடன் 1968-ம் ஆண்டு டாபர் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தவர் ஆவார். இவரிடம் இருந்து 50,000 வரி விலக்கு அளிக்கும் அரசு பத்திரங்களும் பரிமுதல் செய்யப்பட்டுள்ளது.
வழக்குப் பதிவு
வருமான வரித் துறை 2007-2008 நிதி ஆண்டில் பிரதிப் பர்மன் இந்த மோசடியினைச் செய்துள்ளதாக அளித்த புகாரின் பேரில் சொத்துக்களைப் பரிமுதல் செய்து அமலாக்கத் துறை அவர் மீது வழக்கும் பதிவு செய்துள்ளது.
என்ன மோசடி செய்தார்?
ஸ்விசர்லாந்தில் உள்ள எச்எஸ்பிசி வங்கி கணக்கில் 3.21 மில்லியன் டாலரினை டெபாசிட் செய்த பிரதிப் பர்மன் அதனை 2007-2008 நிதி ஆண்டுக்கான வருவாயில் கணக்கு காண்பிக்கவில்லை. இதுவே அவரது சொத்துக்களைப் பரிமுதல் செய்ததற்காகக் காரணம் ஆகும்.


Click it and Unblock the Notifications