லாபத்தில் 49 சதவீத சரிவில் டாடா மோட்டார்ஸ்..!
இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான டாடா மோட்டார்ஸ் மார்ச் 31 உடன் முடிந்த காலாண்டில் மட்டும் லாபத்தில் சுமார் 49.20 சதவீத சரிவை சந்தித்துள்ளது.
கடந்த நிதியாண்டின் மார்ச் காலாண்டில் டாடா மோட்டார்ஸ் 4,336.43 கோடி ரூபாயை லாபமாக பெற்ற நிலையில், 2017-18 நிதியாண்டின் மார்ச் காலாண்டில் வெறும் 2,176.16 கோடி ரூபாய் அளவிலான லாபத்தை மட்டுமே பெற்றுள்ளது.

இக்காலக்கட்டத்தில் இந்நிறுவனத்தின் வருவாய் 91,279 கோடி ரூபாயில் இருந்து 18.2 சதவீதம் சரிந்து 87,255 கோடி ரூபாயாக சரிந்துள்ளது. அதேபோல் வரிக்கு முந்தைய லாப அளவீடுகளில் 55 சதவீதம் சரிந்து 2,308 கோடி ரூபாயாக உள்ளது.
மேலும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திண் கிளை நிறுவனமான JLR வருவாய் 4 சதவீதம் அதிகரித்து 7,555 மில்லியன் பவுண்டாக உயர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications