நாட்டின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான டிசிஎஸ் தனது செயின்ட் பீட்டர்ஸ்பர்க் அலுவலகத்தில் புதிதாக 430 ஊழியர்களைப் பணியில் அமர்த்தியதன் மூலம் புளோரிடா வர்த்தகத்தில் தனது ஊழியர் எண்ணிக்கையை 1,500 ஆக உயர்த்தியுள்ளது.
அமெரிக்கா இன்சூரன்ஸ் நிறுவனமான டிரான்ஸ்அமெரிக்கா உடன் டிசிஸ் பல ஆண்டு வர்த்தக ஒப்பந்தத்தைச் செய்துள்ள நிலையில், ஊழியர் எண்ணிக்கையை அதிரடியாக உயர்த்தியுள்ளது.
டிரான்ஸ்அமெரிக்கா
இந்நிறுவனத்தின் 1 கோடி பாசிலிதாரர்களுக்குச் சேவைகளை எளிமையாகப் பயன்படுத்தவும், டிஜிட்டல் சேவையாக மேம்படுத்தவும் டிசிஎஸ் உடன் கூட்டணி வைத்துள்ளது. இதன் மூலம் டிரான்ஸ்அமெரிக்கா அடுத்தகட்ட வளர்ச்சிக்குத் திட்டமிட்டு வருகிறது.
டிசிஎஸ்
இந்த ஒப்பந்தத்தின் படி டிசிஎஸ், டிரான்ஸ்அமெரிக்காவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்-இல் இருக்கும் பல மாடி அலுவலகத்தில் சில மாடிகள் முழுவதும் டிசிஎஸ் ஊழியர்கள் அமர்த்தப்பட்டுப் பணியாற்ற உள்ளனர்.
430 ஊழியர்கள்
இதுமட்டும் அல்லாமல் டிரான்ஸ்அமெரிக்காவின் 430 முன்னாள் ஊழியர்கள் தற்போது டிசிஎஸ் நிறுவனத்தில் சேர்ந்து செயின்ட் பீட்டர்ஸ்பர்க் அலுவலகத்தில் பணியாற்ற துவங்கியுள்ளனர். இதன் மூலம் ளோரிடா வர்த்தகத்தில் டிசிஎஸ் ஊழியர்கள் எண்ணிக்கை 1,500 ஆக உயர்ந்துள்ளது.
விசா பிரச்சனை
அமெரிக்கா தொடர்ந்து ஹெச்1பி விசா கட்டுப்பாடுகளை அதிகரித்து வரும் நிலையில், இந்திய ஐடி நிறுவனங்கள் தங்களது வர்த்தகம் பாதிக்காமல் இருக்க அதிகளவிலான அமெரிக்க ஊழியர்களைப் பணியில் அமர்த்தி வருகிறது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!



Click it and Unblock the Notifications