இந்திய மென்பொருள் சந்தையில் முன்னணி நிறுவனமாகத் திகழும் இன்போசிஸ் 2017-18 நிதியாண்டில் தனது ஊழியர்களுக்கு அளிக்கப்பட்ட சம்பள அளவுகளை வெளியிட்டுள்ளது.
இந்நிறுவனத்தில் உயர் அதிகாரிகளுக்குக் கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 60 சதவீதம் வரை சம்பள உயர்வு அளித்து அசத்தியுள்ளது.
சலில் பாரிக்
இன்போசிஸ் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியான சலில் பாரிக் தனது வேரியபில் பே உட்படச் சுமார் 18.6 கோடி ரூபாய்ச் சம்பளமாகப் பெற்றுள்ளார்.
எம்டி ரங்கநாதன்
இந்நிறுவனத்தின் தலைமை நிதியியல் அதிகாரியாக இருக்கும் எம்டி ரங்கநாதன் 2016-17ஆம் நிசியாண்டில் வெறும் 4.7 கோடி ரூபாய் மொத்த சம்பளமாகப் பெற்ற நிலையில் 68 சதவீத சம்பள உயர்வுடன் 2017-18ஆம் நிதியாண்டில் 7.9 கோடி ரூபாய்ப் பெற்றுள்ளார்.
மோஹித் ஜோஷி
இன்போசிஸ் நிறுவனத்தின் தலைவராக இருக்கும் மோஹித் ஜோஷி 2016-17இல் 6.8 கோடி ரூபாயை மொத்த சம்பளமாகப் பெற்ற நிலையில் 2017-18ஆம் நிதியாண்டில் 52 சதவீத உயர்வுடன் 10.3 கோடி ரூபாய்ச் சம்பளமாகப் பெற உள்ளார்.
இவர் இன்போசிஸ் நிறுவனத்தின் வங்கி, நிதியியல் மற்றும் இன்சூரன்ஸ் சேவை, ஹெல்த்கேர், லைப்சைன்ஸ் ஆகிய பிரிவு வர்த்தகத்திற்குத் தலைமை வகிக்கிறார். இதுமட்டும் அல்லாமல் பிரேசில், மெக்சிகோ ஆகிய நாடுகளின் இன்போசிஸ் வர்த்தகத்திற்கும் தலைவராக உள்ளார்.
ரவி குமார்
இன்போசிஸ் நிறுவனத்தின் துணை தலைமை செயல் அதிகாரி ரவி குமார் 2016-17இல் 7 கோடி ரூபாயை மொத்த சம்பளமாகப் பெற்ற நிலையில் 2017-18ஆம் நிதியாண்டில் 36 சதவீத உயர்வுடன் 9.5 கோடி ரூபாய்ச் சம்பளமாகப் பெற உள்ளார்.
கிரிஷ் சங்கர்
இந்நிறுவனத்தின் மனிதவள பிரிவின் தலைவர் கிரிஷ் சங்கர் 2016-17இல் 3.7 கோடி ரூபாயை மொத்த சம்பளமாகப் பெற்ற நிலையில் 2017-18ஆம் நிதியாண்டில் 13 சதவீத உயர்வுடன் 4.2 கோடி ரூபாய்ச் சம்பளமாகப் பெற உள்ளார்.
யுபி பிரவின் ராவ்
முன்னாள் சிஇஓ மற்றும் தலைமை செயல் அதிகாரியான யுபி பிரவின் ராவ் கடந்த வருடம் 7.8 கோடி ரூபாயை சம்பளமாகப் பெற்ற நிலையில் 2018-17ஆம் நிதியாண்டில் வெறும் 5 சதவீத சம்பள உயர்வுடன் 8.2 கோடி ரூபாய்ப் பெற்றுள்ளார்.


Click it and Unblock the Notifications