தொழில்முனைவோர் ஆக சரியான வயது எது..?

ஒரு நிறுவனத்தில் மாத சம்பளத்திற்கு வேலை பார்ப்பது ஒரு சுகம் எனில், நாமே நம்முடைய சொந்த முயற்சியில் தொழில் தொடங்கி அதை வெற்றிகரமாக நடத்திடுவது மற்றோரு சுகம்.

மாத சம்பளத்திற்கு வேலை பார்க்கும் பொழுது நாம் நம்முடைய கடமையை மட்டும் செய்தால் மட்டும் போதுமானது. சொந்தமாகத் தொழில் தொடங்கி நடத்தும் பொழுது அதில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளை நாம் அனைவரும் சமாளிக்க வேண்டும்.

 தொழில்முனைவோர்

தொழில்முனைவோர்

ஒவ்வொரு தொழில்முனைவோருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சனை. அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கக் கூடிய ஒரு பொதுவான சூத்திரம் என்று எதுவும் கிடையாது.

பிரச்சனைகளைத் தன் சொந்த முயற்சியில் சமாளித்தது அந்தப் பிரச்சனைகளில் இருந்து வெளிவரும் திறன் பெற்றவர்களே ஒரு சிறந்த தொழில்முனைவாராக ஜொலிக்கின்றனர்.

 

 வெற்றிக்கான வயது

வெற்றிக்கான வயது

நாம் எப்படித் தொழில் முனைவோரையும் அவர்களின் பிரச்சனைகளையும் பொதுப்படுத்த முடியாதோ அதைப் போன்றே அவர்களின் வெற்றியையும் பொதுப்படுத்த இயலாது.

எனினும் தொழில்முனைவோரின் வயதையும் அவர்கள் பெற்ற வெற்றியையும் சம்பந்தப்படுத்தி ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

 புதிதாகத் தொழில்

புதிதாகத் தொழில்

பேஸ்புக் மற்றும் ப்ளிப்கார்ட் போன்ற வெற்றிகரமான தொழில்நுட்ப நிறுவனங்களின் தொழில்முனைவோரின் வயது 20 முதல் 30 வயதிற்குள் இருக்கிறது. இதனால் இளைஞர்கள் மத்தியில் புதிதாகத் தொழில் துவங்க வேண்டும் என்ற ஆர்வம் பலரிடம் தோன்றியுள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் புதிதாகத் தொழில் துவங்கி வெற்றி பெற எது சரியான வயதாகாக இருக்கும்.

 45 வயது தான்

45 வயது தான்

அமெரிக்காவை சேர்ந்த உயர் வளர்ச்சி தொழில்முனைவோர் என்ற பெயரில் செயல்படும் ஒரு இலாபமற்ற அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணியகம் (NBER) மற்றும் மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (MIT) நடத்திய ஆய்வு சராசரியாக, 45 வயதான தொழில் முனைவோர் வெற்றியாளர்களாக விளங்குகின்றனர் எனத் தெரிவிக்கின்றது.

மேலும் அந்த ஆய்வு இளம் வயது அதாவது 20 வயது தொழில் முனைவோர் அவ்வளவாகப் பிரகாசிக்கவில்லை எனவும் தெரிவிக்கின்றது.

 

 27 லட்சம் நிறுவனங்கள்

27 லட்சம் நிறுவனங்கள்

இந்த ஆய்விற்காக அந்த அமைப்பு 2007 முதல் 2014 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் (2.7 மில்லியன் நிறுவனங்கள்) அமெரிக்காவில் புதிதாகத் தொடங்கப்பட்ட அனைத்து வணிக நிறுவனங்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டது. இந்த ஆய்வு முடிவு, பல்வேறு அதிர்ச்சிகரமான மற்றும் பழமையான கருத்துக்களை உடைத்தேறிந்தது.

அதாவது இளம் வயது தொழில் முனைவோருக்கு கடன் அல்லது குடும்பத்தின் பொறுப்புகள் ஏதும் கிடையாததால் அவர்களின் ஆற்றல் மற்றும் நேரத்தை தங்களின் தொழில் முழுவதுமாகச் செலுத்துவதால் மட்டுமே ஒரு சிறந்த தொழில் முனைவோராக விளங்க முடியும் என்கிற பழங்கருத்தை இது உடைத்தெறிந்தது.

 

அதிக வளர்ச்சி

அதிக வளர்ச்சி

இந்த ஆய்வு 50 வயது நிரம்பிய தொழில் முனைவோர் 30 வயது நிரம்பியவரை விட மிக உயர்ந்த வளர்ச்சியை அடைய 1.8 பங்கு அதிக வாய்ப்பு இருப்பதாகச் சுட்டிக்காட்டுகின்றது.

2015 ஆம் ஆண்டில் இங்கிலாந்து (யுனைடெட் கிங்டம்) இல் சேண்ட்லர் பயிற்சி நிறுவனம் மேற்கொண்ட மற்றொரு ஆய்வு, இங்கிலாந்தில் தொழிலதிபரின் சராசரி வயது 47 ஆக இருக்கின்றது எனத் தெரிவிக்கின்றது.

 

வாய்ப்புகள்

வாய்ப்புகள்

இந்த ஆய்வுகள் ஒரு தொழில் அதிபரின் வெற்றிக்கான காரணங்களைக் கூறவில்லை என்றாலும், அவர்களது 40 வயதில் அவர்கள் பொருளாதார ரீதியாக நிலையானதாக இருக்க வாய்ப்புள்ளது எனத் தெரிவிப்பதுடன், அவர்களின் வலுவான தொடர்புகள் மற்றும் நல்ல தொழில் நுண்ணறிவு ஆகிய அனைத்தும் காரணமாக இருக்கலாம் எனச் சுட்டிக் காட்டுகின்றது. (மூலதனத்தை உயர்த்தும் திறனை ஆதரிக்கும் காரணிகள்). 45 வயதில் உள்ளவரின் அனுபவத்துடன் ஒப்பிடும் பொழுது, கல்லூரியை விட்டு இப்பொழுதுதான் வெளியே வந்துள்ளவரின் அனுபவம் மிகப் பெரியது. எனவே இவருடைய தொழில் வாழ்வை நம்மால் புரிந்து கொள்ள இயலும்.

ஸ்டீவ் ஜாப்ஸ்

ஸ்டீவ் ஜாப்ஸ்

ஒரு சில சந்தர்ப்பங்களில், ஆப்பிள் நிறுவனத்தை ஸ்டீவ் ஜாப்ஸ் தொடங்கியதை சுட்டிக் காட்டினாலும், அவருக்கான அங்கீகாரம் வெகு தாமதமாகவே, அவருடைய மத்திய வயதில் மட்டுமே கிடைத்ததது. ஆப்பிள் நிறுவனம் 1976 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது, ஆனால் 2000 ஆம் ஆண்டுகளில் ஐபோன் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகே அந்த நிறுவனம் மிக மதிப்பு வாய்ந்த நிறுவனங்களில் ஒன்றாக ஆனது.

விற்பனை

விற்பனை

இந்த ஆய்வை உற்று நோக்கும்பப் போது ஒரு சில தொழில்கள் மிக விரைவாக வளர்ச்சி அடைந்தாலும் (எடுத்துக்காட்டாக WhatsApp), அந்த வளர்ச்சியைச் சரியாகக் கையாள இயலாத காரணத்தினால் அந்த நிறுவனங்கள் பிற நிறுவனங்களுக்கு விற்கப்படலாம் என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம்.

 40 வயது தான் சரி

40 வயது தான் சரி

ஒரு தனித் தனிநபர் தன்னுடைய 40 வயதில் பெரும் அனுபவம் மற்றும் தகுதியின் மூலம் அவர் தெளிவான மற்றும் உறுதியான முடிவுகளை எடுக்க இயலும். மேலும் தங்களுடைய முதலீட்டாளர்களுக்கும், பங்குதாரர்களுக்கும் நிலையான வருமானத்தை வழங்க முடியும். அதன் மூலம் மூலம் அவர்கள் மேலும் மேலும் தங்கள் வணிகத்தை விரிவாக்குவார்கள்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+