2018ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவின் டாப் 20 பில்லியனர்கள் சுமார் 17.85 பில்லியன் டாலர் அளவிலான சொத்துமதிப்பை இழந்துள்ளனர். இதில் டாப் 5 பில்லியனர்கள் மட்டும் 15 பில்லியன் டாலர் என்பது குறிப்பிடத்தக்கது.
மோடியின் ஆட்சியில் மக்களுக்குப் பெரிய அளவில் நன்மை ஏதும் கிடைக்காமல் இருக்கும் நிலையில், பெரும்தொழிலதிபர்களுக்கு அதிக நன்மை கிடைத்தது வந்தது. தற்போது அதுவும் இல்லையென ஆகியுள்ளது தான்தற்போதைய சோகம்.
அதானி
2014இல் மோடி ஆட்சிக்கு வந்த பின்பு சொத்து மதிப்பில் பெரிய அளவிலான உயர்வைக் கண்ட முக்கியத்தொழிலதிபர்களில் ஒருவர் கெளதம் அதானி என்பது யாராலும் மறுக்க முடியாது.
உலகப் பணக்காரர்கள் பட்டியலில் கெளதம் அதானி 242வது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இழப்பு..
ஆனால் 2018ஆம் ஆண்டில் பல்வேறு காரணங்களுக்காகக் கெளதம் அதானியின் மொத்த சொத்து மதிப்பு 3.68 பில்லியன்டாலர் குறைந்து, 6.75 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது.
இந்தியாவின் முன்னணி 20 பில்லியனர்கள் பட்டியலில் அதிகம் இழப்பைச் சந்தித்த பில்லியனரும் இவர்தான்.
அதானி குரூப்
கெளதம் அதானி தலைமையில் இருக்கும் அதானி குரூப் குழுமத்தில் இருக்கும் நிறுவனங்கள் 7 சதவீதம் முதல் 45 சதவீதம் வரையிலான சரிவை சந்தித்துள்ளது.
மேலும் அதானி எண்டர்பிரைசர்ஸ், அதானி பவர், அதானி டிரான்ஸ்மிஷன்ஸ், அதானி போர்ட்ஸ் & SEZ நிறுவனங்களின்மொத்த லாபம் 13.76 சதவீதம் மட்டுமே 2018ஆம் நிதியாண்டில் உயர்ந்துள்ளது.
திலீப் சங்வி
நாட்டின் மிகபெரிய மருத்துத் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான சன் பார்மா நிறுவனத்தின் தலைவரான திலீப்சங்வி 2018ஆம் ஆண்டில் 3.48 பில்லியன் டாலர் இழந்து இவரது மொத்த சொத்து மதிப்பின் அளவு 9.34 பில்லியன் டாலராகக்குறைந்துள்ளது.
அசிம் பிரேம்ஜி
நாட்டின் 3வது மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமாகத் திகழும் விப்ரோ நிறுவனத்தின் தலைவரான அசிம் பிரேம்ஜி, 2018ஆம் ஆண்டில் தனது நிறுவனம் நிலையான வர்த்தகத்தைப் பெற முடியாத காரணத்தால் இந்நிறுவனப் பங்குகள்சுமார் 16 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.
3.22 பில்லியன் டாலர்
இவர் 2018ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 3.22 பில்லியன் டாலர் அளவிலான சொத்து மதிப்பை இழந்து 14.7 பில்லியன் டாலர்அளவிற்குச் சரிந்துள்ளார்.
முகேஷ் அம்பானி
உலர பணக்காரர்கள் பட்டியலில் 21வது இடத்தில் இருக்கும் முகேஷ் அம்பானி 2018ஆம் ஆண்டில் 2.83 பில்லியன் டாலர்அளவில் இழந்து மொத்த சொத்து மதிப்பு 37.4 பில்லியன் டாலர் வரையில் குறைந்துள்ளது.
முகேஷ் அம்பானி தலைமை விகிக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சந்தை மதிப்பீட்டில் இந்தியாவின் 2வது மிகப்பெரியநிறுவனமாகும்.
குமார் மங்களம் பிர்லா
ஆதித்யா பிர்லா குழுமத்தில் தலைவரான குமார் மங்களம் பிர்லாவும் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளார். இக்குழுமத்தில்8 நிறுவனங்கள் பங்குச்சந்தையில் பட்டியலிட்டு இருக்கும் நிலையில் 2018இல் இந்நிறுவனங்கள் சுமார் 19.72 சதவீதசரிவை சந்தித்துள்ளது. இதன் மூலம் குமார் பிர்லா 2.24 பில்லியன் டாலர் அளவிலான சொத்து மதிப்பை இழந்துள்ளார்.
பிற பணக்காரர்கள்
முகேஷ் அம்பானி, பிர்லா ஆகியோரை தொடர்ந்து 2018இல் அதிகம் இழப்பை சந்தித்தவர்கள் பட்டியலில் கேபி சிங் 1.65 பில்லியன் டாலரும், சைரஸ் பூன்வாலா 1.59 பில்லியன் டாலர் அளவிலான சொத்து மதிப்பை இழந்துள்ளனர்.
அமேசான் அதிரடி..!
கோஹ்லி சேலஞ்ச்
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications