சென்னையின் மிக முக்கிய வர்த்தகக் குழுமங்களில் ஒன்றான எம்ஜிஎம் குழுமத்தின் தலைவர் எம்ஜி முத்து உடல் நலக் குறைவால் சென்னை ராமச்சந்திர மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் காலமானார்.
சென்னை துறைமுகத்தில் மூட்டை தூக்கும் தொழிலாளியாகத் தனது வாழ்க்கையைத் துவங்கிய முத்து அவரின் கடின உழைப்பின் வழியாக இன்று 2,500 கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு மிகப்பெரிய வர்த்தகச் சாம்ராஜியத்தை உருவாக்கிய முத்து தனது 83வது வயதில் மறைந்தார்.

எம்ஜிஎம் குழுமம் தற்போது லாஜிஸ்டிக்ஸ், ஹாஸ்பிடாலிட்டி, ஐஎம்எப்எல் மற்றும் டிஸ்டிலெரி, பன்னாட்டு வர்த்தகம், ஹவுசிங் மற்றும் இன்பராஸ்டக்சர், பொழுதுபோக்கு, ஆகிய துறையில் வர்த்தகம் செய்து வருகிறது.
இவர் வாழ்க்கையில் பல தடைகளைத் தாண்டி, தடைகள் அனைத்தும் வெற்றிப்படிக்கட்டாக அமைத்து வாழ்வில் மிக உயர்ந்த நிலைக்கு உயர்ந்துள்ளார். இவரின் வெற்றிக் கதையைப் படித்தால் பலருக்கும் உத்வேகம் பிறக்கும் சிறிதும் சந்தேகமில்லை.


Click it and Unblock the Notifications