2027-ம் ஆண்டிற்குள் இந்திய கோடிஸ்வரர்களின் எண்ணிக்கை 3 மடங்காக உயர வாய்ப்பு!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகளவில் அதிகக் கோடீஸ்வரர்கள் உள்ள நாடுகள் பட்டியலில் இந்தியா உள்ள நிலையில் இன்னும் 10 ஆண்டுகளுக்குள் கூடுதலாக 238 தனிநபர் கோடீஸ்வரர்கள் உருவாகி இருப்பார்கள் என்று அறிக்கை ஒன்றை அரப்ஆசியா பாங் குளோபல் வெல்த் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

 

இந்தியாவில் தற்போது 119 கோடிஸ்வரகள் உள்ளனர். அமெரிக்கா, சீனாவிற்கு அடுத்தபடியாக மூன்றாம் இடத்தில் இந்தியா உள்ளது. இதுவே 2027-ம் ஆண்டு 357 ஆக உயரும் என்றும் அரப்ஆசியா பாங்க் தெரிவித்துள்ளது. அதே நேரம் சீனாவில் கூடுதலாக 448 தனிநபர்கள் கோடிஸ்வரர்களாக உருவெடுப்பார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதல் மூன்று இடம்

முதல் மூன்று இடம்

2027-ம் ஆண்டு அமெரிக்காவில் அதிகபட்சமாக 884 கோடிஸ்வரர்கள் இருப்பார்கள் என்றும், சீனாவில் 697 கோடிஸ்வரர்களும், இந்தியாவில் 357 கோடிஸ்வரர்களும் இருப்பார்கள் என்றும் ஆய்வறிக்கையில் உள்ள தகவல்கள் கூறுகிறது.

பிற நாடுகள்

பிற நாடுகள்

ரஷ்யா (142), இங்கிலாந்து (113), ஜெர்மனி (90), ஹாங்காங் (78), எனக் கோடிஸ்வரர்கள் பட்டியலில் 4, 5, 6, 7 இடங்களைப் படிக்கும் என்று தரவுகள் கூறுகின்றன.

2027

2027

உலகம் முழுவதும் தற்போது 2,252 பில்லியனர்கள் உள்ள நிலையில் 2017-ம் ஆண்டு 3,444 பில்லியனர்களாக அதிகரித்து இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 இந்திய மக்களின் சொத்து மதிப்பு
 

இந்திய மக்களின் சொத்து மதிப்பு

இந்தியா அனைத்துத் தனிநபர்கள் சொத்து மதிப்புகளையும் சேர்த்து 8,230 பில்லியன் டாலர் என 6 இடத்தில் உள்ளது. 62,584 பில்லியன் டாலர் உடன் அமெரிக்கா முதல் இடத்திலும், 24,803 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் சீனா மூன்றாம் இடத்திலும், 19,522 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 4-ம் இடத்திலும் உள்ளது.

இந்தியாவில் செல்வத்தினை உயர்த்த உதவும் காரணங்கள்

இந்தியாவில் செல்வத்தினை உயர்த்த உதவும் காரணங்கள்

இந்தியாவில் செல்வத்தை உருவாக்க உதவும் காரணிகளாகப் பெரிய நிறுவனங்கள், சிறந்த கல்வி முறை, தகவல் தொழில்நுட்பம், வணிகச் செயல்முறை அவுட்சோர்சிங், ரியல் எஸ்டேட், சுகாதார மற்றும் ஊடகத் துறைகளில் 200% உயர்வு என அறிக்கை கூறுகிறது.

வளர்ந்து வரும் சந்தைகள்

வளர்ந்து வரும் சந்தைகள்

அதே நேரம் சர்வதேச செல்வ மதிப்பானது அடுத்த 10 வருடத்தில் 50 சதவீதம் உயர்ந்து 2027-ம் ஆண்டு 321 டிரில்லியன் டாலர் ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா, வியட்நாம், சீனா, மொரிஷியஸ் ஆகிய நாடுகள் வேகமாக வளர்ந்து வரும் செல்வந்த சந்தைகளாக எதிர்பார்க்கப்படுகின்றன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Number of billionaires in India to rise 3 times by 2027: AfrAsia Bank report

Number of billionaires in India to rise 3 times by 2027: AfrAsia Bank report
Story first published: Thursday, May 24, 2018, 12:51 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X