பங்குச்சந்தையிலும் தமிழர்கள் போராட்டம்.. ஆடிப்போன அனில் அகர்வால்..!

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகத் தூத்துக்குடியில் மட்டுமல்ல லண்டனிலும் தமிழர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மக்களின் இந்தப் போராட்டத்தின் மூலம் 13 பேரின் உயர் இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இதனால் வேதாந்தா குழுமத்திற்கு எவ்விதமான பாதிப்பும் இல்லாமல் இருந்தது.

லண்டனில் இருக்கும் தமிழர்கள் வேதாந்தா நிறுவனத்தின் தலைவர் அனில் அகர்வாலுக்கு நேரடியாகப் பாதிப்பை உருவாக்கும் வகையில் போராட்டத்தை நடத்தி அசத்தி தமிழ்நாடு, தமிழர்களின் வாழ்வுரிமை பிரச்சனையை உலக நாடுகளின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர்.

வீடு முன்பு போராட்டம்

வீடு முன்பு போராட்டம்

தூத்துக்குடியில் இருக்கும் ஸ்டெர்லைட் ஆலையின் தாய் நிறுவனமான வேதாந்தா குழுமத்தை எதிர்த்து, லண்டனில் வசித்து வரும் அதன் தலைவர் அனில் அகர்வால் வீடு முன்பாக லண்டனில் வாழும் தமிழர்கள் போராட்டம் நடத்தினர்.

கொலைகார அனில் அகர்வால்

கொலைகார அனில் அகர்வால்

லண்டனில் அனில் அகர்வால் வீடு முன்பாக ஒன்று திரண்ட தமிழர்கள் கொலைகார அனில் அகர்வால் இந்த வீட்டில்தான் இருக்கிறார் என முழக்கங்கள் எழுப்பினர். இது இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

3 பேர் கைது

3 பேர் கைது

தூத்துக்குடியில் நடைபெற்ற சம்பவத்தைத் தொடர்ந்து லண்டனில் உள்ள அனில் அகர்வாலின் மகன் மீது தாக்குதல் நடத்தியதாக 3 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

பேஸ்புக் பதிவு

பேஸ்புக் பதிவு

தூத்துக்குடி போராட்டத்தின் எதிரொலியாக வேதாந்தா நிறுவனப் பங்குகள் புதன்கிழமை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையில் 7 சதவீதமும், லண்டன் பங்குச்சந்தையில் 11.52 சதவீதமும் சரிந்துள்ளது. இதுகுறித்துப் பேஸ்புக் பதிவு ஒன்று வெளியாகியுள்ளது.

இதுதான் இலக்கு

இதுதான் இலக்கு

நேற்று லண்டன் பங்குச்சந்தையில் வேதாந்தாவின் பங்கு 11.52% வீழ்ந்திருக்கிறது. தூத்துக்குடி படுகொலைகள் மட்டுமே காரணமாக இருந்திருக்க முடியாது. ஆயினும், இது தான் நம்முடைய குறியாக இருத்தல் வேண்டும்.

லண்டன் பங்கு சந்தை

லண்டன் பங்கு சந்தை

லண்டனில் இருக்கும் தமிழர்கள் (ஈழத்தமிழர்களையும் சேர்த்து தான்) லண்டன் பங்கு சந்தையின் முன் போராட்டம் நடத்த முடியுமா என்று யோசியுங்கள். நாம் தொடர்ச்சியாக லண்டன் பங்கு சந்தையினைக் குறிவைப்போம்.

அவர்களுக்கு ஆங்கிலத்தில் எழுதுவோம். பரப்புரைகள் செய்வோம். கார்ட்டியனின் கட்டுரையை ஆதாரமாக முன் வைப்போம். ஒரு கொலைகார நிறுவனத்தைப் பங்கு சந்தைப் பட்டியலில் இருந்து நீக்க அழுத்தம் கொடுப்போம்.

நடக்கும், நடக்காது என்பது இரண்டாம் பட்சம். நமக்கான சாத்தியங்களை நாம் கையில் எடுக்காமல் இது நிற்கப் போவதில்லை.

 

இன்றைய வர்த்தகம்

இன்றைய வர்த்தகம்

தேசிய பங்குச்சந்தையில் இன்று வர்த்தகம் துவங்கும் போதும் வேதாந்தா நிறுவனப் பங்குகள் 4 சதவீதம் வரையில் சரிந்தது. வர்த்தக முடிவில் இந்நிறுவன பங்குகள் 0.65 சதவீதம் சரிந்து 251 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்டது. 

இதேபோல் லண்டன் பங்குச்சந்தையில் வேதாந்தா நிறுவன பங்குகள் 2.20 மணிக்கு 2.22 சதவீதம் வரையில் சரிந்து இருந்தது.

மேலும் சமுக வலைத்தளம் மற்றும் பங்குச்சந்தை வர்த்தக அமைப்புகள் மத்தியில் வேதாந்தா பங்குகளை வாங்க வேண்டாம் என்றும் பரப்புரை செய்யப்பட்டு வருகிறது.

13 பேர் உயிர்

13 பேர் உயிர்

இந்த நாசக்கார தொழிற்சாலையை மூடக் கோரி நடத்தப்பட்ட போராட்டத்தில் இதுவரை 13 பேர் போலீசாரின் துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பலியாகியுள்ளனர். இது உலகம் முழுவதும் வாழும் தமிழ் மக்களை மட்டும் அல்லாமல் மனிதநேயம் உள்ள அனைத்து மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இணைப்பு

லண்டன் பங்குச்சந்தையில் வேதாந்தா நிறுவனத்தின் நிலையும், தமிழர்கள் போராட்டம் பற்றிய பதிவு.

அனில் அகா்வால்

லண்டனில் தமிழர்கள் வேதாந்தா உரிமையாளா் அனில் அகா்வால் வீடு முன்பு முற்றுகை

கோஹ்லி சேலஞ்ச்

கோஹ்லி சேலஞ்ச்

 4 வருட ஆட்சி சாதனைகள்

4 வருட ஆட்சி சாதனைகள்

உயிரை காவு கொடுத்த காவல் துறை

உயிரை காவு கொடுத்த காவல் துறை

 

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+