தூத்துக்குடி மக்களின் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம் தமிழ்நாட்டை, தாண்டி இந்தியா முழுவதும் ஏன் லண்டன் பங்குச்சந்தை வரை சென்று அடைந்துள்ளது. தூத்துக்குடி மக்களுக்காகப் பல மாநில மக்கள் வேதாந்தா ஸ்டெர்லைட் நிறுவனத்தை மூட வலியுறுத்தி வருகின்றனர்.
இதோடு லண்டனில் தமிழர்கள் தூத்துக்குடி மக்களுக்கா போராடி வேதாந்தா நிறுவனத்தின் பங்குகளை 11.52 சதவீதம் வரையில் சரிவில் தள்ளியுள்ளனர். இந்நிறுவனத்தை எதிர்த்து டிவிட்டர், பேஸ்புக்கில் வலிமையான கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
பெங்களூரில் போராட்டம்
ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூட பெங்களூரில் இருக்கும் வேதாந்தா தலைமை அலுவலகம் முன்பு இன்று மதியம் 3 மணிக்கு போராட்டம் நடக்க உள்ளது.
அஸ்திவாரத்தை அசைக்கும்
தேசிய பங்குச்சந்தையில் புதன்கிழமை வர்த்தகத்தில் 7 சதவீதம் சரிந்ததை போல் லண்டன் பங்குச்சந்தையில் 11.52 சதவீதம் வரை வேதாந்தா நிறுவன பங்குகள் சரிந்ததது.
காவல் துறை
ஒரிஸ்ஸாவில் Niyamgiri mountain and Lanjigarh பகுதிகளில் மலைகளில் bauxite mining செய்ய வந்த வேதாந்தா கம்பெனிக்கு எதிராக போராடிய மக்களுக்கு எதிராக ரௌடிகளை ஏவி விட்டு மிரட்டியது. தமிழ்நாட்டில் போலீஸ் அந்த வேலையை அவர்களுக்காக செய்கிறது.
துணை ராணுவ
பாஜக வேதாந்தா குழுமத்திடம்தான் அதிக நன்கொடை பெறுகிறதாம், அதனால்தான் துணை ராணுவத்தை அனுப்பி ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக செயல்படுகிறது
பாஜக வா!? ராகுலா!?
தமிழிசை: தூத்துக்குடி துப்பாக்கிசூட்டிற்கு ஆர்எஸ்எஸ் காரணம் மோடியின் துப்பாக்கி என உளறும் ராகுல்காந்தியைக்கண்டிக்கிறோம்.
வேதாந்தா விடம் கையூட்டு பெற்றது பாஜக வா!? ராகுலா!?
சீதாராம் யெச்சூரி
வேதாந்தா/ஸ்டெர்லைட் நிறுவனத்திடம் பெரிய கட்சிகள் அனைத்தும் அதிகளவிலான பணத்தை நன்கொடியாக பெற்றுள்ளது. இந்த நன்கொடை எல்லாம் காவல் துறைக்கு ஆயுதங்களை பயன்படுத்தவும், அவர்களை தனது சொந்த ராணுவத்தை போல் பயன்படுத்த தான் உபயோகம் செய்யப்படுகிறதா?
ஸ்டெர்லைட் வரலாறு
1994 முதல் 2009 வரை
யாருக்காக அரசு..?
கார்ப்பரேட் நிறுவனங்கள் கொடுக்கும் நன்கொடைகள் மூலமே காங்கிரஸ், பிஜேபி இயக்குகிறது என்றால் ஆட்சியும் திட்டமும் நிறுவனங்களுக்காக தானா..? இல்லை மக்களுக்காகவா..?
இது குஜராத் மாடல்..
அமைதியான போராட்டக்காரர்களை வேண்டுமென்றே சுட்டு வீழ்த்தியுள்ளனர்.
பிரதமர் மோடியின் பதில்...
நாட்டில் பல பிரச்சனைகள் பெரியதாக வெடித்துள்ளது, குறிப்பாக தூத்துக்குடி போராட்டம் பற்றி நாடு முழுவதும் பேசப்பட்டு வரும் நிலையில், விராட் கோஹலியின் பிட்நெஸ் சேலெஞ்ச்-ஐ ஏற்று கொண்டு விரைவில் வீடியோவை வெளியிடுவதாகவும் மோடி தெரிவித்துள்ளார்.
அனைத்திற்கும் மேல் இதுவரை அவர் வெளிநாட்டிற்கு செல்லாமல் இருப்பது பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.
டி. வேல்முருகன்
பேருக்குத்தான் முதல்வர் மற்றும் அமைச்சர்கள்; மற்றபடி தமிழ்நாட்டை இன்று ஆளுவது ஆளுநர், தலைமைச் செயலர் மற்றும் துறைச் செயலர்களே!
லண்டன் போராட்டம்
லண்டனில் இருக்கும் தமிழர்கள் வேதாந்தா நிறுவனத்தின் தலைவர் அனில் அகர்வாலுக்கு நேரடியாகப் பாதிப்பை உருவாக்கும் வகையில் போராட்டத்தை நடத்தி அசத்தி தமிழ்நாடு, தமிழர்களின் வாழ்வுரிமை பிரச்சனையை உலக நாடுகளின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர்.


Click it and Unblock the Notifications