விசிடிங் கார்டின் முக்கியத்துவம் ஒரு நிறுவனத்தின் விற்பனை பிரிவில் இருக்கும் நபர்களுக்கும், மேலாளர் பதவியில் இருப்பவர்களுக்கும் மட்டுமே தெரியும். காரணம் இவர்கள் அனைவரும் ஒரு நிறுவனத்திற்கு வர்த்தகத்தையும் வருமானத்தையும் கொண்டு வரும் முக்கியமான பிரதிநிதி ஆவார்.
ஆனால் இவர்களையும் தாண்டி ஒரு நிறுவனத்தின் தலைவர்களின் பர்சனல் விசிடிங் கார்டுகளுக்கு மதிப்பு மிகவும் அதிகம். சொல்லப்போனால் தலைவர்களின் விசிடிங் கார்டுகளை வைத்திருப்பவர்களுக்குச் சந்தையில் கூடுதல் மரியாதை உள்ளது.
உதாரணமாக
கூகிள் தலைவர் சுந்தர் பிச்சையின் பர்சனல் விசிடிங் கார்டை நீங்கள் பெற்ற வேண்டும் என்றால் அவருடன் நெருங்கிப் பழகியிருக்க வேண்டும், அவர் உங்கள் மீது நம்பிக்கை வைத்திருக்க வேண்டும். இப்படியான சூழலில் மட்டுமே உங்களுக்கு அவரின் விசிடிங் கார்டு உங்களுக்குக் கிடைக்கும். அப்படிப் பெற்று இருந்தால் அதுவே உங்களது சாதனை தான். இப்படித் தலைவர்களின் விசிடிங் கார்டுகளுக்குத் தனி மதிப்பே உண்டு.
ஆனால் பேஸ்புக் மார்க் ஜூக்கர்பெர்க்-இன் விசிடிங் கார்டை வெளியில் காட்டுவதற்குக் கூடச் சற்று யோசிப்போம். ஏனென்றால்... நீங்களே பாருங்கள்.
தலைவர்கள்
உலகின் முக்கியமான வர்த்தகத் தலைவர்களின் பயன்படுத்திய பர்சனல் விசிடிங் கார்டுகளைப் பெரும்பாலும் யாரும் பார்த்திருக்க வாய்ப்புகள் இல்லாத நிலையில், அவை உங்கள் பார்வைக்குக் கொண்டு வரும் சிறு முயற்சியாக இந்தக் கட்டுரை.
கூகிள்
உலகின் மிகப்பெரிய டெக் நிறுவனங்களில் ஒன்றான கூகிள் நிறுவனத்தின் தலைவர் லேரி பேஜ் மற்றும் எரிக் ஸ்கிமிட் ஆகியோர் பயன்படுத்திய விசிடிங் கார்டு.
டிவிட்டர்
சமுக வலைத்தள உலகின் முன்னணி நிறுவனமான டிவிட்டர்-இன் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் ஈவன் வில்லியம்ஸ் பயன்படுத்திய விசிடிங் கார்டு.
பராக் ஒபாமா
முன்னாள் அமெரிக்க அதிபரான பராக் ஒபாமா பயன்படுத்திய விசிடிங் கார்டு.
ஹிலாரி கிலின்டன்
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்புக்கு கடுமையான போட்டி அளித்த ஹிலாரி கிலின்டன் பயன்படுத்திய விசிடிங் கார்டு.
கோஃபி அனன்
யுனைடெட் நேஷன்ஸ் அமைப்பின் தலைவார இருந்த கோஃபி அனன் பயன்படுத்திய விசிடிங் கார்டு.
மார்க் ஜூக்கர்பெர்க்
பேஸ்புக் நிறுவன தலைவர் மார்க் ஜூக்கர்பெர்க், நிறுவனத்தைத் துவங்கிய காலத்தில் நான் புதுமையானவன், தன் சுயத்தை வெளிப்படையாகக் காட்ட வேண்டும் என்ற எண்ணம் உடையவராகத் திகழ வேண்டும் என்று தனது முதல் விசிடிங் கார்டில் ஐஎம் சிஇஓ, பிட்ச் என அச்சிட்டுக் கொண்டார்.
பில் கேட்ஸ்
மைக்ரோசாப்ட் என்னும் வெற்றி சாம்ராஜித்தை உருவாக்கியதன் மூலம் டெக் உலகில் நீங்கா இடத்தைப் பிடித்துள்ள பில் கேட்ஸ் பயன்படுத்திய விசிடிங் கார்டு இது.
ஸ்டீவ் ஜாப்ஸ்
டிஜிட்டல் உலகின் இன்றைய மிகப்பெரிய வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட ஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிள் நிறுவனத்தை மட்டும் அல்லாமல் பிக்சார், நெக்ஸ்ட் ஆகிய மற்ற இரு நிறுவனங்களையும் துவக்கினார். இப்போது அவர் பயன்படுத்திய விசிடிங் கார்டு இது.
பெடல் காஸ்ட்ரோ
க்யூபா கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் மற்றும் இந்நாட்டின் 15வது அதிபரான பெடல் காஸ்ட்ரோ பயன்படுத்திய விசிடிங் கார்டு.
ஆபிரகாம் லிங்கன்
அமெரிக்காவின் 16வது அதிபர் மட்டும் அல்லாமல் வாழ்வில் தோல்வி நிறைந்து இருந்தாலும், அனைத்தையும் தாண்டி எப்படி வெற்றி பெறுவது என்பதற்கு உதாரணமாக விளங்கும் ஆபிரகாம் லிங்கன் பயன்படுத்திய விசிடிங் கார்டு.
வால்ட் டிஸ்னி
கார்டூன் உலகை திருப்பிபோட்ட வால்ட் டிஸ்னியின் விசிடிங் கார்டு இது.
கிரியேட்டிவான விசிடிங் கார்டு
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications