நாட்டின் முன்னணி ஆன்லைன் ஹோட்டல் புக்கிங் நிறுவனமான OYO தனது வர்த்தகத்தைச் சீனாவிற்கு விரிவாக்கம் செய்துள்ளது.
பொதுவாகச் சீனாவில் இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்குப் பெரிய அளவிலான வெற்றி வாய்ப்புகள் இருக்காது என்பது ஒருபுறம் இருந்தாலும், இந்திய நிறுவனம் சீனாவிற்கு வர்த்தக விரிவாக்கம் செய்ததே வித்தியாசமாகத் தான் தற்போது பார்க்கப்படுகிறது.
முதலீடு
உலகின் முன்னணி மல்டி பிராண்ட் ஹோட்டல் குரூப் நிறுவனமான சீனா லாட்ஜிங் குரூப், OYO நிறுவனத்தின் 8 மாதங்களுக்கு முன்பு பெரிய தொகையை முதலீடு செய்திருந்தது.
இந்த முதலீட்டின் மூலம் இரு நிறுவனங்களும் நீண்ட கால வர்த்தகத் தொடர்பை உருவாக்கவும் திட்டமிட்டது.
சீனா
இந்நிலையில் சீனாவில் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் முக்கியமானதாக விளங்கும் சென்ஜென் நகரில் OYO மற்றும் சீனா லாட்ஜிங் குரூப் இணைந்து சுமார் 8 ஹோட்டல்களை அமைத்துள்ளது. இதில் கிட்டதட்ட 400 ரூம்கள் கொண்டதாக அமைத்து இக்கூட்டணி தனது வர்த்தகத்தைச் சீனாவில் துவங்கியுள்ளது.
ஊழியர்கள்
சீனாவின் வர்த்தக வளர்ச்சி சிறப்பாக இருக்கவும் வேண்டும் என்பதற்காக OYO நிறுவனம் சுமார் 60-70 ஊழியர்கள் பணியில் அமர்த்தியுள்ளது. இந்நிலையில் அடுத்தச் சில மாதங்களில் சீனாவில் வர்த்தக விரிவாக்காத்தில் இக்கூட்டணி ஈடுபடத் திட்டமிட்டுள்ள நிலையில் ஹோட்டல்கள் மற்றும் ஊழியர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதாகத் தெரிகிறது.
இந்தோனேஷியா
அதேபோல் OYO வர்த்தகம் தற்போது இன்தோனேஷியாவில் ஜகார்டா நகரில் 130 ரூம்கள் உடன் வர்த்தகத்தைத் துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
2016இல் இந்நிறுவனம் மலேசியாவிலும், 2017இல் நேப்பாளத்திலும் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்த OYO தற்போது சீனாவில் அடியெடுத்து வைத்துள்ளது.
அடுத்த மாதம்
2011ஆம் ஆண்டில் துவங்கப்பட்ட இந்நிறுவனம் அடுத்த மாதம் துபாய் நகரத்தில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டு அசத்தப்போகிறது.


Click it and Unblock the Notifications