பேஸ்புக் மார்க் ஜூக்கர்பெர்க்-ஐ திக்குமுக்காட வைத்த அந்த 15 கேள்விகள் இதுதான்..!!

கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா தகவல் மோசடிக்குப் பின்பு கடினமான நேரத்தைச் சந்தித்து வரும் பேஸ்புக் சி.ஈ.ஓ மார்க் ஜூக்கர்பெர்க்-க்கு ஓய்வென்பதே கிடையாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். பல மில்லியன் பேஸ்புக் பயனர்களின் தகவல்களைக் கசியவிட்டதற்காக அமெரிக்கச் செனேட் சபை முன்பு ஆஜராகி வாடி வதங்கி ஒரு சில வாரங்களே ஆன நிலையில், தற்போது ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தின் உறுப்பினர்கள் முன்பு ஆஜராகி உள்ளார் மார்க் ஜூக்கர்பெர்க்.

நிழல் கணக்குகள், தரவு தொடரல் போன்ற பல பிரச்சனைகள் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்களின் கடுமையான கேள்விகளை எதிர்கொண்டார் உலகின் மிகப்பெரிய சமூகவலைத்தள நிறுவனத்தின் சி.ஈ.ஓ. ' டிஜிட்டல் அரக்கனை உருவாக்கிய புத்திசாலி' என ஒப்பிடப்பட்டார் மார்க்.

ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சமீபத்திய விசாரணையின் போது, ஜூக்கர்பெர்க் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் தவித்தார். மார்க் ஜூக்கர்பெர்க்-ஆல் விடையளிக்க முடியாத அந்த 15 கேள்விகளைத் தான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.

கேள்வி #1

கேள்வி #1

2015ல் கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்திற்குத் தகவல்கள் கசிந்த விசயத்தைப் பயனர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டாம் என்ற முடிவை நீங்கள் தனித்து எடுத்தீர்களா?

கேள்வி #2

கேள்வி #2

இவ்வளவு பெரிய மோசடிக்குப் பின் பேஸ்புக் நிறுவனத்தை மூட இது சிறந்த நேரம் என நீங்கள் நினைக்கிறீர்களா? அப்படிச் செய்யக்கூடாது என்பதற்கான காரணத்தைக் கூற முடியுமா?

கேள்வி #3

கேள்வி #3

எப்படிப் பேஸ்புக்கில் போலிக் கணக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது என்பதை விளக்க முடியுமா?

கேள்வி #4

கேள்வி #4

பயனர் பேஸ்புக்கை விட்டு வெளியேற விரும்பினாலும், அவர்களின் விருப்பமின்றிப் பேஸ்புக் தகவல்களைத் திரட்டவோ அல்லது அவற்றை மூன்றாம் தரப்புச் செயலிகளிடம் விற்கவோ மாட்டோம் என உறுதியளிக்க முடியுமா?

கேள்வி #5

கேள்வி #5

பயனர்கள் பேஸ்புக்கை விட்டு வெளியேறும் போது எந்த விதிமுறைகளின் கீழ் மற்றும் எவ்வளவு விரைவாக அவர்களின் தகவல்கள் முழுமையாக நீக்கப்படும்?

கேள்வி #6

கேள்வி #6

அதிநவீன போலிக் கணக்குகளைக் குறிவைக்க என்ன செய்யப் போகிறீர்கள், குறிப்பாக அரசியல் காரணங்களுக்காகப் பயன்படுத்தும் போலி கணக்குகள்?

கேள்வி #7

கேள்வி #7

பயனர்களாக இல்லாதவர்களின் தகவலை வைத்து பேஸ்புக் என்ன செய்யும்? அதை எந்த வழியிலாவது விற்பீர்களா?

கேள்வி #8

கேள்வி #8

பேஸ்புக் பயனர்களாக இல்லாதவர்கள் , தங்களைப் பற்றி என்ன தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன என்பதை எப்படியாவது பார்க்க முடியுமா?

கேள்வி #9

கேள்வி #9

வாட்ஸ்அப் மற்றும் மெசன்ஞர்-ஐ தனித்தனியாகப் பிரிக்கும் யோசனை ஏதும் உள்ளதா?

கேள்வி #10

கேள்வி #10

உங்களை எப்படி ஞாபகம் வைத்துக்கொள்வார்கள்? ஸ்டீவ் ஜாப்ஸ் மற்றும் பில்கேட்ஸ் உடன் உலக்கையை மாற்றியமைத்த 3 இணைய ஜாம்பவான்களில் ஒருவராகவா அல்லது டிஜிட்டல் அரக்கனை உருவாக்கிய புத்திசாலியாகவா?

கேள்வி #11

கேள்வி #11

விளம்பரங்களில் இருந்து முற்றிலும் விடுபடத் தனது பயனர்களைப் பேஸ்புக் எப்போதாவது அனுமதிக்குமா?

கேள்வி #12

கேள்வி #12

பேஸ்புக்கின் நிலையான அமைப்புகளைப் பயன்படுத்தும் போது, அனைவரின் குழந்தைகளும் பாதுகாப்பாக இருப்பார்கள் எனக் கூற முடியுமா?

கேள்வி #13

கேள்வி #13

பயனர்களின் தகவல்களில் சமரசம் செய்யும் போது ஏன் பேஸ்புக் அவர்களிடம் தெரிவிக்கவில்லை?ஏன் தக்க பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யப் பயனர்களுக்கு வாய்ப்பு வழங்கவில்லை?

கேள்வி #14

கேள்வி #14

பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் சேவைகளுக்கு இடையே ஐரோப்பிய பயனர்களின் தகவல்கள் பரிமாற்றம்/பயன்படுத்தவோ மாட்டோம் என உறுதிகூற முடியுமா?

கேள்வி #15

கேள்வி #15

பேஸ்புக்கின் தேவைக்கு அதிகமாகப் பயனர்களின் தகவல்களைப் பயன்படுத்த அவர்களிடம் தற்போதோ அல்லது எதிர்காலத்திலோ அனுமதி அளிக்கக் கோர மட்டோம் என உறுதிகோர முடியுமா?

அடேய் மார்க்கு..

அடேய் மார்க்கு..

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+