2017-18ஆம் நிதியாண்டுக்கு இந்தியாவில் இருக்கும் 5 கோடி ஓய்வூதியதாரர்களுக்கு 8.55 சதவீத வட்டி வருமானத்தை அளிக்க ஓய்வூதிய அமைப்பான ஈபிஎப்ஓ தனது பீல்ட் ஆபீசர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
8.55 சதவீத வட்டி
ஊழியர்கள் அமைச்சகமும் 2017-18ஆம் நிதியாண்டுக்கு 8.55 சதவீத வட்டி வருமானம் அளிக்க ஒப்புதல் அளித்து, அதற்காக உத்தரவை மத்திய அரசிடம் அளித்துள்ளது.
தேர்தல்
தற்போது தொடர்ந்து பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருவதால், இப்புதிய வட்டி வருமானத்தை அமலாக்கம் செய்யமுடியாத நிலையில் மத்திய அரசு உள்ளது. இந்நிலையில் ஊழியர்கள் அமைச்சகம் தேர்தல் ஆணையத்திடம் புதிய வட்டி வருமானத்தை அமலாக்கம் செய்ய ஒப்புதலுக்காகக் காத்துக்கொண்டு இருக்கிறது.
5 வருடக் குறைவான வட்டி
2016-17இல் ஈபிஎப்ஓ அமைப்பு 8.65 சதவீத வட்டி வருமானத்தை அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல் 2015-16இல் 8.8 சதவீதம், 2014-15 மற்றும் 2013-14ஆம் ஆண்டுகளில் 8.75 சதவீதம் அளிக்கப்படுகிறது.
இந்நிலையில் தற்போது அளிக்கப்படும் 8.55 சதவீத வட்டி விகிதம் என்பது கடந்த 5 வருடக் குறைவான அளவீடு என்பது குறிப்பிடத்தக்கது.
5 கோடி கணக்காளர்கள்
தற்போது அளிக்கப்படும் 8.55 சதவீத வட்டி வருமானம் 5 கோடி பேரின் மக்களின் கணக்குகாளர்கள் பாதிக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது.


Click it and Unblock the Notifications