மோடியின் 4 வருட ஆட்சியின் லாபமும், நஷ்டமும்..!

நரேந்திர மோடி நாட்டின் பிரதமராகப் பதவியேற்றி 4 வருடங்கள் முழுமையாக முடிந்த நிலையில், இந்த 4 வருத்தில் இந்தியா பொருளாதாரம் பல இடங்களில் பல ஏற்ற இறக்கங்களைச் சந்தித்துள்ளது, இந்த அதிகப்படியான மாற்றத்தில் யார் லாபம் அடைந்தார்கள், யார் நஷ்டமடைந்தார்கள் என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

பங்குச்சந்தை

பங்குச்சந்தை

கடந்த 4 வருடத்தில் அதாவது 26 மே 2014 முதல் 25 மே 2018 வரை இடையிலான காலத்தில் சென்செக்ஸ் குறியீடு 24,716.9 புள்ளிகளில் இருந்து 34,924.90 புள்ளிகள் வரையில் உயர்ந்துள்ளது. இது கிட்டத்தட்ட 41.30 சதவீதமும் வரையில் உயர்ந்துள்ளது.

அதேபோல் நிஃப்டி 44.11 சதவீதமும், பிஎஸ்ஈ மிட்கேப் 87.44 சதவீதமும், பிஎஸ்ஈ ஸ்மால்கேப் 92.20 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது.

 

அதிகப்படியான வளர்ச்சி

அதிகப்படியான வளர்ச்சி

கடந்த 4 வருடத்தில் எப்எம்ஜிசி, என்பிஎப்சி, ஆட்டோமொபைல் துறை சார்ந்த 15 லார்ஜ்கே பங்குகள் 3 மடங்குகளாக உயர்ந்துள்ளது.

இதில் பஜாஜ் பைனான்ஸ் 946 சதவீதமும், பஜாஜ் பின்சர்வ் 581 சதவீதம், பிரிட்டனானியா 570 சதவீதமும், அசோக் லெய்லாண்டு 355 சதவீதம், டிவிஎஸ் மோட்டார் 354 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது.

 

ஸ்மால் மற்றும் மிட்கேப் பங்குகள்

ஸ்மால் மற்றும் மிட்கேப் பங்குகள்

அதேபோல் ஸ்மால் மற்றும் மிட்கே பங்குகள் அதிகளவிலான வளர்ச்சி இந்த 4 வருடத்தில் 9,577 சதவீதம் வரையில் சில நிறுவனங்கள் வளர்ச்சி அடைந்துள்ளது.

அன்னிய முதலீடுகள்

அன்னிய முதலீடுகள்

2014ஆம் நிதியாண்டில் 97,067 கோடி ரூபாய் அன்னிய முதலீடாகவும், -28,564 கோடி ரூபாய் உள்நாட்டு முதலீடாகவும் உள்ளது

2015ஆம் நிதியாண்டில் 17,806 கோடி ரூபாய் அன்னிய முதலீடாகவும், 67,395 கோடி ரூபாய் உள்நாட்டு முதலீடாகவும் உள்ளது,

அதேபோல் 2016 ஆம் நிதியாண்டில் 20,566 கோடி ரூபாய் அன்னிய முதலீடாகவும், 35,973 கோடி ரூபாய் உள்நாட்டு முதலீடாகவும் உள்ளது

2017ஆம் நிதியாண்டில் 49,729 கோடி ரூபாய் அன்னிய முதலீடாகவும், 90,527 கோடி ரூபாய் உள்நாட்டு முதலீடாகவும் உள்ளது,

2018ஆம் நிதியாண்டில் இதுவரை 1,027 கோடி ரூபாய் அன்னிய முதலீடாகவும், 46,649 கோடி ரூபாய் உள்நாட்டு முதலீடாகவும் உள்ளது.

 

பணமதிப்பிழப்பு

பணமதிப்பிழப்பு

பிரதமர் மோடி நாட்டில் இருக்கும் கருப்புப் பணத்தை ஒழிக்கும் விதமாகப் பழைய 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் செல்லாது என அறிவித்ததன் மூலம் நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகச் சந்தை பெரிய அளவிலான பாதிப்பை உருவாக்கியது.

இதன் வெற்றி இன்னும் விவாதிக்கும் அளவிலாகவே உள்ளது.

 

ஜிடிபி

ஜிடிபி

2014க்கு முன் 8 சதவீதம் வரையிலான வளர்ச்சி இருந்த நிலையில், கடந்த 4 வருடத்தின் சராசரி வளர்ச்சி அளவு 7.3 சதவீதமாக உள்ளது.

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

பொருளாதார, வளர்ச்சி பெரிய அளவில் பாதிக்கப்பட்ட நிலையில் நாட்டில் வேலைவாய்ப்பு சந்தை அதிகளவிலான பாதிப்புகளை உருவாக்கியுள்ளது.

தனியார் முதலீடுகள்

தனியார் முதலீடுகள்

மத்திய மற்றும் மாநில அரசுகள் நாட்டின் வளர்ச்சிக்கு அதிகளவிலான முதலீடு செய்தாலும், தனியார் முதலீடுகள் சந்தையில் பெரிய அளவில் குறைந்துள்ளது.

ஜிஎஸ்டி

ஜிஎஸ்டி

நாட்டின் மறைமுக வரியை முழுமையாக மாற்றிய ஜிஎஸ்டி மூலம் தற்போது சராசரியாக மாதம் 90,000 கோடி ரூபாய் வரியை மத்திய அரசு வசூல் செய்து வருகிறது.

வராக்கடன்

வராக்கடன்

தற்போது IBC சட்டம் மற்றும் மறுமுதலீடு திட்டங்கள் வராக்கடன் பிரச்சனைகள் அதிகளவில் குறைந்துள்ளது. இதனால் பல நிறுவனங்கள் தற்போது தங்கள் கடனை திருப்பி அளித்து வருகின்றனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+