ஐபிஎல் 2018: யார் யாருக்கு எவ்வளவு பரிசுன்னு தெரிஞ்சா சும்மா ஆடிப்போயிருவீங்க..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இடையிலான இறுதி போட்டியில் சிஎஸ்கே சிறப்பான் வெற்றி அடைந்து ஐபிஎல் 2018 போட்டிகள் முடிவடைகிறது.

 

ஐபிஎல் போட்டிகள் மூலம் கிரிக்கெட் வீரர்களின் திறன் சிறப்பாக வெளிப்படுகிறது ஒரு பக்கம் இருந்தாலும் வீரர்களுக்கு இப்போட்டிகள் மூலம் பல புதிய வாய்ப்புகளை உருவாக்கித் தருகிறது. இதுமட்டும் அல்லாமல் இந்தப் போட்டிகளுக்குப் பின்னால் பல நிறுவனங்களுக்கு விளம்பரத்தின் வாயிலாகத் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யப் பல கோடிகளை முதலீடு செய்துள்ளது.

இதனால் ஒவ்வொரு வருடம் இப்போட்டி மீதான வர்த்தகம் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதோடு போட்டியாளர்களுக்குப் பரிசு தொகையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மேன் ஆப் தி மேட்ச்

மேன் ஆப் தி மேட்ச்

ஒவ்வொரு லீக் போட்டியிலும் மேன் ஆப் தி மேட்ச் ஐபிஎல் கம்மென்ட்ரி டீம் தேர்வு செய்யப்படும் வீரர்களுக்கு 1 லட்சம் ரூபாயும் டிராபியும் அளிக்கப்படுகிறது.

அதேபோல் ப்ளேஆப் போட்டியின் மேன் ஆப் தி பேட்ச் பட்டத்தை வெல்லும் வீரர்க்கு 5 லட்சம் ரூபாயும் டிராப்பியும் அளிக்கப்படுகிறது.

இறுதி ஆட்டத்தில் மேன் ஆப் தி மேட்ச் விருதை ஷேன் வாட்சன் 117 ரன்களை குவித்து தட்டிச்சென்றார்.

விவோ பர்பெக்ட் கேச் ஆப் தி பேட்ச்

விவோ பர்பெக்ட் கேச் ஆப் தி பேட்ச்

ஒவ்வொரு ஐபிஎல் போட்டியில் சிறந்த கேட்ச் பிடிப்பவர்களுக்கு 1 லட்சம் ரூபாயும், டிராபியும், விவோ போனும் அளிக்கப்படுகிறது.

அதேபோல் சீசனின் பர்பெக்ட் கேச் ஆப் தி சீசன் வெற்றி பெறும் வீரருக்கு 10 லட்சம் ரூபாயும், டிராபியும், விவோ போனும் அளிக்கப்படும்.

இந்த விருது டிரென்ட் போல்ட்-க்கு அளிக்கப்பட்டது.

 

சூப்பர் ஸ்ட்ரைக்கர் ஆப் தி பேட்ச்
 

சூப்பர் ஸ்ட்ரைக்கர் ஆப் தி பேட்ச்

ஒவ்வொரு ஐபிஎல் போட்டியிலும் அதிக ஸ்ட்ரைக் ரேட் பெற்ற வீரர்களுக்கு 1 லட்சம் ரூபாயும், டாடா நெக்சான் வழங்கும் டிராப்பியும் வழங்கப்படுகிறது.

சுனில் நரேன் (கொல்கத்தா) இந்த சீசனில் மிகச் சிறந்த ஸ்டிரைக்கிங் ரேட் உள்ள வீரர் கோப்பையும் டாடா நெக்சான் காரும் பரிசாக வழங்கப்பட்டது.

 

FBB ஸ்டைலீஷ் ப்ளேயர் ஆப் தி பேட்ச்

FBB ஸ்டைலீஷ் ப்ளேயர் ஆப் தி பேட்ச்

ஐபிஎல் கம்மென்ட்ரி டீம் தேர்வு செய்யப்படும் வீரர்களுக்கு ஸ்டைலான ப்ளேயருக்கு 1 லட்சம் ரூபாயும், எப்பிபி வழங்கும் டிராப்பியும் வழங்கப்படும்.

சீனின் ஸ்டைலீஷ் ப்ளேயர் ஆப் தி சீசன் வெற்றி பெறும் வீரருக்கு 10 லட்சம் ரூபாயும், டிராபியும் அளிக்கப்படும்.

இந்த விருது ரிஷப் பந்த்-க்கு வழங்கப்பட்டது.

 

ஸ்டார் பிளஸ் நயி சோச் விருது

ஸ்டார் பிளஸ் நயி சோச் விருது

போட்டியின் இன்னோவேடிவ் மொமென்ட் வெற்றி பெறும் நபருக்கு ஸ்டார் பிளஸ் வழங்கும் டிராப்பி மற்றும் 1 லட்சம் ரூபாய் பரிசு.

சீனின் நயி சோச் விருதை வெற்றி பெறும் வீரருக்கு 10 லட்சம் ரூபாயும், டிராபியும் அளிக்கப்படும்.

மகேந்திர சிங் தோனி (சிஎஸ்கே) மிகவும் வித்தியாசமான முறையில் சிந்தித்து செயல்பட்டதற்கான இந்த விருது வழங்கப்பட்டது.

 

ஆரஞ்ச் கேப்

ஆரஞ்ச் கேப்

ஐபிஎல் போட்டியில் அதிக ரன்களை எடுத்தவர்களுக்கு ஆரஞ்ச் கேப் வழங்கப்படும்.

இந்த வருடம் ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் 17 ஆட்டங்களில் 735 ரன்கள் எடுத்துள்ளார். 8 அரை சதம் அடித்துள்ளார். அதிகபட்சம் 84 ரன்கள். இவருக்கு இந்த விருதும் ரூ.10 லட்சம் பரிசுடன் கோப்பை வழங்கப்பட்டது.

ஆரஞ்ச் கேப் வரலாறு

ஆரஞ்ச் கேப் வரலாறு

இதற்கு முன் வென்றோர் பட்டியல்

2008 - ஷான் மார்ஷ் (பஞ்சாப்) - 616 ரன்கள்

2009 - மேத்யூ ஹேடன் (சிஎஸ்கே) - 572

2010 - சச்சின் டெண்டுல்கர் (மும்பை) - 618

2011 - கிறிஸ் கெயில் (பெங்களூர்) - 608

2012 - கிறிஸ் கெயில் (பெங்களூர்) - 733

2013- மைக்கேல் ஹசி (சிஎஸ்கே) - 733

2014 - ராபின் உத்தப்பா (கொல்கத்தா) - 660

2015 - டேவிட் வார்னர் (ஹைதராபாத்) - 562

2016 - விராட் கோஹ்லி (பெங்களூர்) - 973

2017 - டேவிட் வார்னர் (ஹைதராபாத்) - 641

 

 

பர்பிள் கேப்

பர்பிள் கேப்

ஐபிஎல் போட்டியில் அதிக விக்கெட்களை எடுத்தவர்களுக்குப் பர்பிள் கேப் வழங்கப்படும்.

இந்த வருடம் ஆன்ட்ரூ டை (பஞ்சாப்) 14 ஆட்டங்களில் 24 விக்கெட்களை வீழ்த்தினார். சிறந்த பந்து வீச்சு 16 ரன்களுக்கு 4 விக்கெட்கள்.

ரூ.10 லட்சம் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது.

பர்பிள் கேப் வரலாறு

பர்பிள் கேப் வரலாறு

இதற்கு முன் வென்றோர் பட்டியல்

2008 - சோஹைல் தன்வீர் (ராஜஸ்தான்) - 22 விக்கெட்கள்

2009 - ஆர்பி சிங் (டெக்கான்) - 23

2010 - பிரக்யான் ஓஜா (டெக்கான்) - 23

2011 - லசித் மலிங்கா (மும்பை) - 28

2012 - மார்னே மார்க்கல் (டெல்லி) - 25

2013 - டாய்னே பிராவோ (சிஎஸ்கே) - 32

2014 - மோகித் சர்மா (சிஎஸ்கே) - 23

2015 - டாய்னே பிராவோ (சிஎஸ்கே) - 26

2016 - புவனேஸ்வர் குமார் (ஹைதராபாத்) - 23

2017 - புவனேஸ்வர் குமார் (ஹைதராபாத்) - 26

வெற்றி அணி

வெற்றி அணி

ஐபிஎல் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு 20 கோடி ரூபாய் பரிசு அளிக்கப்படுகிறது. பலர் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு சிஎஸ்கே அணி இந்த விருதை வென்றது.

 இதற்கு முன் சாம்பியன் பட்டம் வென்ற அணி

இதற்கு முன் சாம்பியன் பட்டம் வென்ற அணி

2008 - ராஜஸ்தான் ராயல்ஸ்

2009 - டெக்கான் சார்ஜர்ஸ்

2010 - சென்னை சூப்பர் கிங்ஸ்

2011 - சென்னை சூப்பர் கிங்ஸ்

2012 - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

2013 - மும்பை இந்தியன்ஸ்

2014 - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

2015 - மும்பை இந்தியன்ஸ்

2016 - சன் ரைசர்ஸ் ஹைதராபாத்

2017 - மும்பை இந்தியன்ஸ்

2வது அணி

2வது அணி

அதேபோல் இறுதி போட்டியில் தோற்றுப்போகும் அணிக்கு 12.5 கோடி ரூபாய் பரிசு தொகை அளிக்கப்படும்.

இரண்டாவது இடத்தை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பிடித்தது.

 

 

இதற்கு முன் இரண்டாவது இடத்தைப் பிடித்த அணிகள்

இதற்கு முன் இரண்டாவது இடத்தைப் பிடித்த அணிகள்

2008 - சென்னை சூப்பர் கிங்ஸ்

2009 - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

2010 - மும்பை இந்தியன்ஸ்

2011 - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

2012 - சென்னை சூப்பர் கிங்ஸ்

2013 - சென்னை சூப்பர் கிங்ஸ்

2014 - கிங்ஸ் லெவன் பஞ்சாப்

2015 - சென்னை சூப்பர் கிங்ஸ்

2016 - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

2017 - ரைசிங் புனே சூப்பர் ஜயன்ட்ஸ்

 

 

வாழ்த்துக்கள் சிஎஸ்கே

C for Comeback
C for Champions
C for #CSK

10.3 மில்லியன் மக்கள்

10.3 மில்லியன் மக்கள்

நேற்றைய ஐபிஎல் இறுதி போட்டியை மட்டும் சுமார் 1.03 கோடி பேர் இணையத்தின் வாயிலாக மட்டும் பார்த்து ரசித்துள்ளனர். 

வரலாற்றில் ஒரு நேரலை நிகழ்ச்சியை அதிகம்பேர் பார்த்தது இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.

அம்பையர்

அம்பையர்

பொதுவாகக் கிரிக்கெட் போட்டிகளில் இருக்கும் அம்பையர்களுக்குப் போட்டிக்குத் தகுந்தார் போர் சம்பளம் மாறுப்படும்.

உள்ளூர் போட்டிகளாக இருந்தால் 1200 ரூபாய்
தேசிய அளவிலான போட்டிகளுக்கு 15,000 ரூபாய்
ஒன்டே இண்டர்நேஷனல் போட்டிகளுக்கு 800-1200 டாலர் வரை

ஆனால் ஐபிஎல் போட்டியில் அம்பையர்களுக்குச் சராசரியாக 2500-2800 டாலர் வரையிலான சம்பளம் கிடைக்கிறது. இதுதவிர ஒவ்வொரு போட்டியின் முடிவிலும் ஐபிஎல் நிர்வாகம் அல்லது விளம்பரதாரர் அளிக்கும் கிப்ட்களும் அளிக்கப்படுகிறது.

 

அடுத்த விராட் கோஹ்லி

அடுத்த விராட் கோஹ்லி

<strong>அடுத்த விராட் கோஹ்லி இவர்தான்.. அனுஷ்கா யாருன்னு கேட்காதீங்க..!</strong>அடுத்த விராட் கோஹ்லி இவர்தான்.. அனுஷ்கா யாருன்னு கேட்காதீங்க..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

IPL Final CSK Vs SRH: IPL AWARDS 2018

IPL Final CSK Vs SRH: IPL AWARDS 2018 - Tamil Goodreturns | ஐபிஎல் 2018: யார் யாருக்கு எவ்வளவு பரிசுன்னு தெரிஞ்சா சும்மா ஆடிப்போயிருவீங்க..! - தமிழ் குட்ரிட்டன்ஸ்
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X